பதவி உயர்வுக்கு விருந்து வைத்தபோது, நண்பரின் மனைவியை அந்த கணவனின் நண்பனான ராணுவ அதிகாரி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு ராணுவ அதிகாரி தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவத்தைச் செய்தவர் ஆவர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரில் பணியாற்றி வரும் ராணுவ அதிகாரி ஒருவருக்கு, லெப்டினன்ட் பதவியிலிருந்து கர்னல் பதவி, உயர்வு கிடைத்து உள்ளது. இதனால், மகிழ்ச்சி அடைந்த அந்த ராணுவ அதிகாரி, தனது விட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்து உள்ளார். 

அதன் படி, அந்த விருந்தில் கலந்து கொள்ள அங்குள்ள லக்னோவில் பணியாற்றும் சக ராணுவ அதிகாரியும், தனது நண்பருமான ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார். அதன்படி, அவர்களும் லக்னோவில் இருந்து வந்து, இந்த விருந்தில் கலந்து கொண்டனர்.

அதன்படியே, அந்த விருந்தும் நடந்து முடிந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், பதவி உயர்வு பெற்றதற்காக, விருந்து வைத்த கர்னலின் மீது, விருந்துக்கு வந்த அவரது நண்பரான சக ராணுவ அதிகாரி, அங்குள்ள கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்து உள்ளார். 

அந்த புகார் மனுவில், “எனது மனைவி ரஷ்ய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்” என்றும், குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “எனது நண்பராக இருந்த ராணுவ அதிகாரியான கர்னல், பதவி உயர்வுக்காக என்னையும், எனது மனைவியையும் விருந்துக்கு அழைத்து ராணுவ அதிகாரி, எனது மனைவிக்கு போதை பானம் கலந்து கொடுத்துவிட்டு, அவரை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்” என்று, பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். 

அதில், கர்னல் அவரது நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது குறித்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரியைத் தேடிச் சென்றனர். அப்போது, அந்த அதிகாரி தலைமறைவானது தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த அதிகாரியை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்தனர். இந்த தகவலை அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டர் ராஜ் குமார் அகர்வால் உறுதிப்படுத்தினார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட ராணுவ அதிகாரி நீரஜ் கெஹ்லோட் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். ஆனாலும், அவர் தற்போது தலைமறைவாகி விட்டார் என்றும், அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்றும், போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம், சக ராணுவ அதிகாரிகள் மத்தியிலும், உத்தரப் பிரதேசம் மாநிலத்திலும் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.