மனைவி முன்னிலையே மற்றொரு பெண்ணை பலாத்காரம் செய்த கணவனுக்கு, அவரது மனைவியே காவலாக நின்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்திரப் பிரதேச மாநிலம் கவுசம்பி பகுதியில் கணவன் - மனைவியினர் குடும்பமாக வசித்து வந்தனர். அந்த வீட்டின் கணவன், வேலை நிமித்தமாக அங்குள்ள பாசிம் சரீரா பகுதியில் உள்ள மலை பகுதிக்கு அடிக்கடி சென்று வருவார் என்று கூறப்படுகிறது. 

இப்படி, அந்த மலை பகுதிக்குச் சென்று வரும்போது, அந்த பகுதியில் உள்ள மலைவாழ் சிறுமியான 16 வயதான சிறுமியை பார்த்து, அந்த கணவன் சபலப்பட்டு உள்ளார். 

அத்துடன், “எப்படியும் அந்த பெண்ணை தான் அடைந்து விட வேண்டும்” என்று, அவர் திட்டமிட்டு உள்ளார். 

பின்னர், வீடு திரும்பிய அந்த கணவன், “அந்த மலை வாழ் பெண்ணைப் பற்றியும், அவர் மீது கொண்ட ஆசை பற்றியும்” தனது மனைவியிடம் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டுக்கொண்ட அவருடைய மனைவி, கணவன் ஆசையை நிறைவேற்ற முன்வந்தார்.

அதன் படி, கணவன் ஆசைப்பட்ட அந்த மலைப்பகுதிக்குச் சென்று, குறிப்பிட்ட அந்த 16 வயதான பெண்ணை, ஏதோ பேசி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த மனைவி முன்னிலையிலே அந்த 16 வயதான பெண்ணை, அவரது கணவன் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

அப்போது, “நீங்கள் இந்த பெண்ணுடன் ஜாலியா இருங்க, ஆள் யாரும் வரங்களானு நான் ஓரமா இருந்து பார்க்கிறேன்” என்று, அவரது மனைவி கூறியிருக்கிறார். 

பின்னர், அதன் படியே, தனது கணவன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தபோது, தனது கணவனுக்கு காவலாக அவரது மனைவி நின்றிருக்கிறார்.

அதன்படி, அந்த மலைவாழ் பெண்ணை தனது மனைவி முன்னிலையிலேயே பாலியல் பலாத்காரம் செய்த அந்த கணவன், “இந்த பலாத்காரம் சம்பவம் பற்றி வெளியே சொன்னால், உன்னை கொலை செய்துவிடுவேன்” என்றும், அவனர் மிரட்டியிருக்கிறார்.

இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், வீடு திரும்பிய நிலையில், தனக்கு ஏற்பட்ட இந்த பாலியல் கொடுமைகள் பற்றி தன்னுடைய தாயாரிடம் கூறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாயார், தனது மகளின் வாழ்வை சீரழித்தவர்கள் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

ஆனால், போலீசார் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண், அங்குள்ள நீதி மன்றத்தின் உதவியை நாடி உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்மந்தப்பட்ட தம்பதிகள் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரிக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், சம்மந்தப்பட்ட தம்பதிகள் மீது போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.