தந்தை ஒருவர், தனது 2 மகள்களை கடந்த 3 ஆண்டுகளாக மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெற்ற மகள்களை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே தான் இப்படி ஒரு கொடூரமான பாலியல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அடுத்து உள்ள சூரத்கல் காவல் எல்லைக்கு உட்பட்ட காட்டிபள்ளா பகுதியைச் சேர்ந்த சரவணன் (பெயா் மாற்றப்பட்டுள்ளது) வசித்து வருகிறார்.

கூலி தொழிலாளியான இவர், தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு 16 வயது மற்றும் 15 வயதில் 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்கள் என்பதால், பெற்றோர் இருவரம் தினமும் வேலைக்குச் சென்று வந்தனர்.

இப்படியான சூழ்நிலையில், மனைவி வேலைக்கு சென்ற நேரத்தில் அவரது 2 மகள்களும் தனியாக வீட்டில் இருப்பது வழக்கம். 

இந்த சூழலில் தான், தந்தையான சரவணன், மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து தனது காம பார்வையை மகள்கள் மீது திருப்பி உள்ளார். மகள் மீது சபலப்பட்ட அவர், தனது காம இச்சைகளை மகள்களிடம் தீர்த்து கொள்ள முடிவு செய்து உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, 2 சிறுமிகளின் தந்தையான சரவணன், வேலைக்கு செல்வது போல் சென்று விட்டு, மீண்டும் திரும்பி வீட்டுக்கு வந்து, தான் பெற்ற மகள்கள் என்று கூட பார்க்காமல், அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்திருக்கிறார்.

அத்துடன், தந்தையான சரவணன், தனது மகள்கள் 2 பேரையும் மிரட்டியே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். 

மேலும், “இது பற்றி தாய் உட்பட வெளியே யாரிடமாவது கூறினால், குடும்பத்துடன் உங்களை கொன்று விடுவேன்” என்றும், அவர் மிரட்டி வந்து உள்ளார்.

இதனால், கடுமையாகப் பயந்து போன இரு சிறுமிகளும், தங்களுக்கு தந்தையால் நேரும் பாலியல் அவலங்கள் குறித்து வெளியே யாரிடமும் எதுவும் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளனர். இதனை, இன்னும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சரவணன், தான் பெற்ற மகள்கள் இருவரையும் கடந்த 3 ஆண்டுகளாக மிரட்டியே தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

தந்தை சரவணனின் பாலியல் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால், அவருடைய 2 மகள்கள் இது பற்றி தங்களது மாமாவிடம் கூறி அழுதிருக்கிறார்கள். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக, அங்குள்ள சூரத்கல் காவல் நிலைய்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக போக்சோ உள்ளிட்ட சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், சரவணனை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.