நண்பனின் காதலியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட இளைஞன், தனது நண்பனை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்திரப் பிரதேச மாநிலம் மீரட்டில் அம்ரோஹா மாவட்டத்தில் இருக்கும் தனோரா மண்டி என்னும் பகுதியில் நசீம் என்ற இளைஞர், தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். 

நசீம், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஹீனா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.

எனினும், இளைஞர் நசீம், அங்குள்ள மீரட்டில் உள்ள கித்தோர் நகரில் பணியாற்றி வந்தார். 

அப்போது, அவர் தனது காதலியான ஹினா உடன், அங்குள்ள கர்முக்தேஸ்வரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இப்படியான சூழலில், நசீமின் நண்பர் டேனிஷ் என்ற இளைஞன், அவர்களது வீட்டிற்குள் அடிக்கடி வந்து சென்று உள்ளார்.

அப்போது, நசீமின் உடன் திருமணம் செய்துகொள்ளாமால் ஒன்றாக வாழ்ந்து வந்த காதலி ஹினாவுடன், நசீமின் நண்பர் டேனிஷ் பேசி பழகி அவருடன் சற்று நெருக்கமாகி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பெண்னின் காதலன் நசீமுக்கு தெரியாமல், அவர்கள் இருவரும் ரகசியமாக சந்தித்து பேசியும் வந்ததாகவும் கூறப்படுகிறது.

தனது நண்பன் மற்றும் காதலிகள் இருவரும் தனக்குத் தெரியாமல் அடிக்கடி ரகசியமாகச் சந்தித்துப் பேசும் விஷயம், நசீமுனுக்கு தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த நசீம், தன்னுடைய நண்பன் டேனிஷிடம், “இனி என் வீட்டிற்கு நீ வரக்கூடாது” என்று, கோபமாகவே கூறியுள்ளார். 

அத்துடன், “காதலி ஹீனாவை மறந்து விடுமாறு” காதலன் கூறியிருக்கிறான். 

“ஆனால், மீறினால் மிக கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்” என்றும், காதலன் எச்சரித்திருக்கிறான்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ந்தியடைந்த நண்பன் டேனிஷ், தனது நண்பன் நசீமை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திட்டமிட்டு கொலை செய்து விட்டு, அங்குள்ள கால்வாயில் வீசி உள்ளார்.

இதனையடுத்து, நண்பனை கொலை செய்த டேனிஷ், நண்பனின் காதலியை ஹினாவை திருமணம் செய்து கொண்டு, அவருடன் அங்குள்ள கர்முக்தேஸ்வரில் வாழத் தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில், கடந்த 6 மாதமாக நசீமை காணாத நிலையில், அவரின் பெற்றோர் அங்குள்ள காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரித்த நிலையில், நசீமை தேடி உள்ளனர். அப்போது, அவர் கொலை செய்யப்பட்டது போலீசாருக்கு தெரிய வந்த நிலையில். அவரின் உடலையும் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். 

இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில், நண்பனை கொலை செய்த டேனிஷை போலீசார் அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.