கொரோனாவால் உயிருக்கு போராடும் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை, பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2 வது அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இதனால், நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போர் எண்ணிக்கையானது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. இதனால், ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, அங்கு முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால், முன்பைவிட, தற்போது அங்கு கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இப்படியான நிலையில், டெல்லியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பவ்ரீன் காந்தாரி என்ற பெண், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அதிர்ச்சியூட்டும் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். 

அந்த பதிவில், “என் நெருங்கிய தோழியின் தந்தை, தற்போது கொரோனா தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகிறார்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். எனினும், அவருக்கு தற்போது ஆக்சிஜன் கிடைக்கவில்லை. இதனால், ஆக்சிஜன் கிடைக்க உதவி செய்யும்படி, என் வீட்டருகே வசிக்கும் ஒருவரிடம், தோழியின் இளைய சகோதரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அப்போது அவர், “நீ என்னுடன் பாலியல் உறவுக்கு வந்தால் மட்டுமே, உன் தந்தைக்கு ஆக்சிஜன் கிடைக்க நான் உதவி செய்வேன்” என்று, அந்த நபர் கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அந்த இளம் பெண், கடும் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து அழுதுகொண்டே வீடு திரும்பி உள்ளார்.

இதனைக் குறிப்பிட்டு, தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பெண் சமூக ஆர்வலரான பவ்ரீன் காந்தாரி, “இது போன்ற நபர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது?” என்று, கேள்வி கேட்டுப் பதிவிட்டுள்ளார்.

இதனால், அந்த நபரின் செயலுக்கு இணையத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து உள்ளன. அத்துடன், “இது தொடர்பாக காவல் துறையில் புகார் அளிக்கும்படி” பலரும் கருத்து தெரித்து வருகின்றனர்.

இதனிடையே, கொரோனாவால் உயிருக்குப் போராடும் தந்தையை காப்பாற்ற ஆக்சிஜன் உதவி கேட்ட பெண்ணை, பாலியல் உறவுக்கு அழைத்த சம்பவம் கடும் தலைநகர் டெல்லியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.