காதலியுடன் இருந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க நண்பனிடமே 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த 31 வயதுடைய சமீர் ஜோரி என்ற நபர், தன்னுடைய நண்பன் நெருங்கிப் பழகி வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாகப் பழகி வந்திருக்கிறார்கள்.

இப்படியான சூழலில், சமீர் ஜோரியின் நண்பன் டெல்லியில் ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்திருக்கிறார். அத்துடன், தனது காதலியுடன் அவர் அடிக்கடி தனிமையில் சென்று வந்திருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில், அவர் தனது காதலியுடன் வெளியே சென்றிருந்த நிலையில், அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்திருக்கிறார். இதனை, அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்திருந்த நிலையில், அதனை தன்னுடைய லேப்டாப்பை பதிவு செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது பார்த்து ரசித்து வந்திருக்கிறார்.

ஒரு நாள் நண்பர்கள் இருவரும் ஒன்றாக லேப்டாப் யூஸ் பண்ணிக்கொண்டிருந்த நிலையில், இளம் பெண்ணை காதலித்து வந்த சமீர் ஜோரியின் நண்பன் தனது லேப்டாப்பை சரியாக ஆப் செய்யாமல், அப்படியே சென்று உள்ளார். 

இதனை பயன்படுத்திக்கொண்ட, சமீர் ஜோரி தனது நண்பனின் லேப்டாப்பை ஓபன் பண்ணி அவர், அவருடைய காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை தனது செல்போனில் பதிவு செய்துகொண்டு சென்றுவிட்டார்.

இதனையடுத்து, பூங்கொத்துகள் அடங்கிய கவர் ஒன்றை தனது நண்பனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த கவரில், கவரில் கடிதம் மற்றும் பென் டிரைவ் ஒன்றும் வைத்து அனுப்பியிருக்கிறார்.

அந்த பென் டிரைவில், சம்மந்தப்பட்ட இளைஞன் அவரது காதலியுடன் தனிமையில் இருக்கும் பாலியல் வீடியோ அடங்கிய இருந்து உள்ளது.  

மேலும், அந்த கடிதத்தில் 10 லட்சம் ரூபாய் கேட்டு, அந்த நபர் மிரட்டல் விடுத்திருந்தார். 

அத்துடன், பணம் கொடுக்கவில்லை எனில், இந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்றும், அவர் மிரட்டியிருக்கிறார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞன், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.  

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், “31 வயதுடைய சமீர் ஜோரி என்ற நபர் தான், பணம் கேட்டு மிரட்டியது” தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட இளைஞன், “சமீர் ஜோரி என்னுடைய 7 ஆண்டுகளா நண்பன்” என்று, போலீசாரிடம் அவர் கூறியுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், சமீர் ஜோரியை அதிரடியாகக் கைது செய்தனர். 

மேலும், ஜோரியிடம் இருந்து வீடியோ, மேக்புக், பென்டிரைவ் மற்றும் கார் ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ஜோரிக்கு, திடீரென்று பணம் தேவைப்பட்டதால், நண்பனின் வீடியோவை திருட்டுத்தனமாக எடுத்து அவரை மிரட்டி பணம் கேட்டு மிரட்டியது” தெரிய வந்தது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.