சலூன் கடை நடத்தி வந்த ஒருவர், தொழிலதிபர் வேஷத்தில் பல பெண்களுக்கும் காதல் வலை விரித்த நிலையில், ஏராளமான இளம் பெண்கள் அவரது காதல் வலையில் விழுந்து மோசம் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னவுர் நகரைச் சேர்ந்த அமீர் என்கிற 25 வயது இளைஞர் ஒருவர், அதே பகுதியில் முடிதிருத்தும் சலூன் நடத்தி வருகிறார். இந்த இளைஞர், எந்த நேரமும், சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருந்து உள்ளார். அத்துடன், சமூக வலைத்தளங்களில் அழகாக போட்டோக்கள் போடும் இளம் பெண்களின் அழகில் தன்னை பறிகொடுத்து வந்திருக்கிறார்.

இதனையடுத்து. சமூக வலைத்தளத்தில், புதிய பெயரில் தன்னை ஒரு தொழிலதிபர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டிருக்கிறார். அதன்படியே, தொழிலதிபர் போலவே, கோட் சூட் என்று, வித விதமான போஸ் கொடுத்து, போட்டோக்களை எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த போட்டோக்களைப் பார்த்து பலரும், அவரிடம் நட்பாக மாறினார்கள். குறிப்பாக, இந்த கோட் சூட் போட்டோக்களை பார்த்த பல பெண்கள், அவருடன் நட்புக்கான அழைப்பு கொடுத்து, நண்பர்களாக மாறிப்போனார்கள்.

அப்படி, சமூக வலைத்தளங்களில் நட்பாக அறிமுகம் ஆன இளம் பெண்களிடம் தொழிலதிபர் வேஷத்தில் வலை வீசிய சலூன் கடை இளைஞனும், அவருடன் புதிதாக நட்பாக ஆன இளம் பெண்களும் மாறி மாறி தொடர்ச்சியாகப் பேசி, தனது காதல் வலையில் வீழ்ந்து இருக்கிறார்.

இப்படியாக, தனது ஆசை வார்த்தையில் மயங்கும் இளம் பெண்களிடம் அந்த இளைஞன், சம்மந்தப்பட்ட இளம் பெண்களின் அந்தரங்க போட்டோக்களை கேட்டு வாங்கியிருக்கிறார். அந்த பெண்கள் போட்டோக்களை அனுப்பிய சில நாட்களில், அந்த போட்டோக்களை வைத்தே, “இதனை இணையத்தில் வெளியிட்டு விடுவேன்” என்று, மிரட்டி மிரட்டியே சம்மந்தப்பட்ட இளம் பெண்களிடம் பணம் பறித்து வந்திருக்கிறார். 

அந்த வகையில், தொழிலதிபர் வேஷத்தில் வலை வீசிய சலூன் கடை இளைஞனின் காதல் வலையில் விழுந்து ஏமார்ந்த போன பெண்கள் பட்டியல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருந்துள்ளது.

அப்படி ஏமாந்த பல இளம் பெண்கள், காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் இருந்த நிலையில், கடைசியாக ஏமார்ந்த 13 வயதான சிறுமி மட்டும், தனது ஆபாச போட்டோவை கொடுத்து மோசடியாக ஏமார்ந்து போனதால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

13 வயது சிறுமி அளித்த புகாரின் போரில், வழக்குப் பதிவு செய்த போலீசார் சம்மந்தப்பட்ட இளைஞர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக, அவரிடம் ஏமார்ந்து போன பல இளம் பெண்கள், தற்போது தங்களது பெயரும் போலீசாரிடம் மாட்டக்கூடும் என்கிற பீதியில் உள்ளனர். முக்கியமாக, அவரிடம் ஏமார்ந்த இளம் பெண்களை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.