“கணவன், அவரது காதலியுடன் சேர்த்து வாழ தனது வாழ்க்கையையே விட்டுக்கொடுத்த மனைவி, சரியான புரிதலுடன் விவகாரத்து கொடுத்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் இப்படி ஒரு வினோதமான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

இந்தியில், சல்மான்கான், ஐஸ்வர்யா ராய், அஜய் தேவ்கன் நடித்த “Hum Dil De Chuke Sanam” படத்தின் கதை போன்று ஒரு சம்பவம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உண்மையாகவே அரங்கேறி இருக்கிறது.

போபாலைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு, தனது கணவரை அதிகமாக அவர் நேசித்து வந்து உள்ளார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், தனது கணவனின் அன்றாட நடவடிக்கையில் சில மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அந்த மாற்றங்களை அவரின் மனைவி கவனித்து உள்ளார்.

அதாவது, தனது கணவன் தனது முன்னாள் காதலியுடன் தொடர்ச்சியாக பேசி வந்துள்ளார். காதலியைத் தவிர்க்க முடியாமல் அவர் கடும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனை, அவரின் மனைவி கவனித்து உள்ளார். 

அதே நேரத்தில், தனது கணவனை மிகவும் அதிகம் நேசித்த அவரது மனைவி, கணவன் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வந்ததைப் பார்த்து கண்டு வேதனை அடைந்து உள்ளார். இதனால், ஆழ்ந்து யோசித்த அவர், ஒரு வித்தியாசமான முடிவை எடுத்து உள்ளார்.

அதன் படி, “தன் கணவன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும்” என்று எண்ணிய அவர் மனைவி, கணவனின் காதலியுடன், தன் கணவனை சேர்த்து வைக்க முடிவு செய்தார். இதனை, தனது கணவனிடம் அவர் கூறியிருக்கிறார். ஆனால், அந்த கணவனோ, தனது மனைவியை விவாகரத்து செய்யாமல், தனது காதலியை திருமணம் செய்யவும் விரும்பி உள்ளார். அத்துடன், மனைவி மற்றும் காதலி இருவருடனும் திருமண உறவில் இருக்க வேண்டும் என்று, அந்த கணவர் தன் மனைவியிடம் விருப்பம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால், சட்டப்படி இப்படியான திருமண உறவு முறைக்கு சாத்தியமில்லை என்பதால், அவரது மனைவி தனது கணவனை, அவரது காதலியை திருமணம் செய்து வைக்க முன் வந்தார். அத்துடன், தன் கணவன், அவர் காதலியை கரம் பிடிக்கவும், அந்த மனைவி பெரிதும் உதவியும் வந்து உள்ளார்.

அதன் படி, தனது கணவருக்கு விவாகரத்து கொடுக்க, அந்த மனைவி முடிவு செய்தார். அதன் படியே, மத்தியப் பிரதேச நீதிமன்றத்தில் விவகாரத்து கேட்டு மனு தாக்கல் செய்த அவர் மனைவி, முறைப்படி விவகாரத்து பெற்று கணவனின் திருமணப் பந்தத்தில் இருந்து விலகி, கணவனின் காதலியுடன், தன் கணவனுக்கு முன் நின்று திருமணமும் செய்து வைத்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய இந்த வழக்கின் வழக்கறிஞர், “அந்த நபர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமலேயே, தன்னுடைய காதலியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார் என்றும், இது சட்டப்படி சாத்தியமில்லை என்பதால், அவரின் மனைவி மிகவும் முதிர்ச்சியடைந்து, இப்படி ஒரு வித்தியாசமான முடிவை எடுத்திருக்கிறார்” என்றும், குறிப்பிட்டார்.

இந்த சம்பவம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. அந்த மனைவியின் செயலுக்கு பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். பலரும் அந்தப் பெண்ணுக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில், அந்தப் பெண்ணின் கணவருக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.