கொல்கத்தா அருகே கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை, மனைவியே எரித்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு பர்கானா மாவட்டம் கைகட்டா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ராம்கிருஷ்ணா சர்க்கார், தன் மனைவி ஸ்வப்னா உடன் வசித்து வந்தார். இவர்களுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த நிலையில், கள்ளக் காதல் ஒன்று வந்து, இவர்களது வாழ்க்கையில் புயலைக் கிளப்பி இருக்கிறது.

அதாவது, ராம்கிருஷ்ணாவின் மனைவி ஸ்வப்னாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுஜித் தாஸ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இப்படியான இவர்களது உல்லாச வாழ்க்கை கணவன் ராம்கிருஷ்ணாவுக்கு தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியை அழைத்துக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, மனைவி ஸ்வப்னா தனது கள்ளக் காதலனுக்கு இந்த விசயத்தைத் தெரியப்படுத்தி உள்ளார். இதனால், அவர்கள் தங்களது கள்ளக் காதல், எந்த தடையும் இல்லாமல் செல்ல யோசித்து உள்ளனர்.

அதன் படி, தங்களது கள்ளக் காதலுக்கு இடையூறாக உள்ள கணவன் ராம்கிருஷ்ணாவை கொலை செய்ய, கள்ளக் காதலன் சுஜித் தாஸுடன் இணைந்து மனைவி ஸ்வப்னாவும் திட்டமிட்டு உள்ளனர்.

திட்டமிட்டபடி, கணவன் ராம்கிருஷ்ணாவை ஆட்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்திற்கு வர வைத்து உள்ளனர். அதன்படி, அவர் அங்கு வரவே, அங்கு மறைந்திருந்த கள்ளக் காதலன் சுஜித் தாஸுடன் இணைந்து மனைவி ஸ்வப்னா, தனது கணவன் ராம்கிருஷ்ணாவை கொலை செய்து, பெட்ரோலை ஊற்றி அவரது உடலை எரித்து உள்ளனர். அதன் தொடர்ச்சியாக, கணவனின் உடலை கள்ளக் காதலன் சுஜித் தாஸுக்கு சொந்தமான ஒரு மைதானத்தில் புதைத்து உள்ளனர். 

இதையடுத்து, கள்ளக் காதலர்கள் இருவரும் தங்களது உல்லாச இன்ப வாழ்க்கையை மேலும் தொடர்ந்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, ராம்கிருஷ்ணா சர்க்காரை அவர்களது உறவினர்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. அப்போது, அவரது மனைவியிடம் கேட்டு உள்ளனர். ஆனால், அவர் சரிவர பதில் சொல்லாமல் மாற்றி மாற்றிப் பேசியதாகத் தெரிகிறது. 

இதனால், இன்னும் சந்தேகம் அதிகரிக்கவே, அவர்களது உறவினர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இதையடுத்து, ராம்கிருஷ்ணா சர்க்காரின் மனைவி ஸ்வப்னாவிடம் விசாரித்து உள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணமாக பதில் அளித்துள்ளார். இதனையடுத்து, போலீசார் தங்களது பாணியில் விசாரித்து உள்ளனர். அப்போது, கள்ளக் காதலன் உடன் சேர்ந்து, தனது கணவனை கொலை செய்து, உடலை எரித்து, புதைத்து விட்டதாக அவர் கூறி உள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், கள்ளக் காதலர்கள் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணிகளையும் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.