“இந்தியாவிலேயே ஏழைகள் அதிகம் உள்ள மாநிலம் பீகார் என்றும், ஏழைகள் குறைந்த மாநிலம் கேரளா” என்றும், நிதி ஆயோக் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ள பினராயி விஜயன், பாஜகவிற்கு சரியான பதிலடி கொடுத்து உள்ளார்.

அதாவது, உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “தேர்தலின் போது பொது மக்கள் நீங்கள் தவறு செய்துவிட்டால், காஷ்மீர், கேரளா, பெங்கால் போன்ற மாநிலமாக நம்ம உத்தரப் பிரதேசம் மாற அதிக நாட்கள் ஆகாது” என்று, எதிர்மறையாகவே பேசுவது போல் பேசினார்.

தொடர்ந்து பேசிய யோகி ஆதித்யநாத், “இதனை பொது மக்களாகிய நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றும், எச்சரிக்கை விடுக்கும் வகையில், அம்மாநில மக்களிடம் அவர் பேசினார்.

அத்துடன், “என்னுடைய 5 ஆண்டு உழைப்புக்கு, உங்கள் ஓட்டுகள் தான் வாழ்த்தாக அமையும் என்றும், குற்றம் இல்லாத, பயம் இல்லாத, கலவரம் இல்லாத மாநிலமாக உத்தரப் பிரதேசத்தை மாற்ற உங்கள் ஓட்டு எங்களுக்கு வழி வகுக்கும்” என்றும், அவர் யோகி பேசினார்.

ஆனால், யோகியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான், நிதி ஆயோக் அளித்த அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியான நிலையில், இதனை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் நிதி ஆயோக் அளித்த அறிக்கையின்படி, “இந்தியாவில் அதிக ஏழைகள் மிகுந்த மாநிலங்களில் பீகார் முதல் இடம்” படித்து உள்ளது. 

மேலும், “ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்கள் இந்தியாவில் அதிக ஏழைகள் மிகுந்த மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களிலும் இடம் பெற்று உள்ளன. 

குறிப்பாக, “இந்தியாவில் வறுமை குறைந்த மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், கேரளாவின் மக்கள் தொகையில் 0.71 சதவீதம் பேர் மட்டுமே வறுமையில் உள்ளனர்” என்றும், நிதி ஆயோக் அடிக்கோடிட்டு காட்டி உள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்ட இந்த அறிக்கையில் கேரளாவை மையப்படுத்தி வறுமை ஒழிப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்ட அந்த அறிக்கையை சுட்டிக்காட்டி பெருமையாக தனது டிவிட்டர் பக்தக்தில் பதிவிட்டுள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “உத்தரப் பிரதேச மாநிலம் கேரளாவாக மாறினால், அந்த மாநிலத்திற்கு சிறந்த கல்வி கிடைக்கும்” என்று, செம பதிலடி கொடுத்து உள்ளார். 

அத்துடன், “உத்தரப் பிரதேச மாநிலம் கேரளாவாக மாறினால், அந்த மாநிலத்திற்கு சுகாதார சேவைகள் மேம்படும்” என்றும், சமட்டி அடியாக பாஜகவிற்கு பதிலடி தந்து உள்ளார்.

மேலும், “ #KeralaStandsout என்ற ஹேஷ்டேக்” பதிவிட்டுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், “நிதி ஆயோக் அறிக்கையின் படி கேரளாவில் தேசிய சராசரியான 25.01 சதவீதற்த்திற்கு எதிராக 0.71 சதவீத மக்கள் மட்டுமே ஏழைகளாக உள்ளனர் என்றும், இதனால்  கேரளாவில் வறுமை ஒழிக்கப்பட்டுஉள்ளது” என்பதையும் அவர் பெருமையோடு சுட்டிக்காட்டி உள்ளார்.

குறிப்பாக, “கேரளா, குழந்தை இறப்பு விகிதத்தில் தனித்து நிற்கிறது என்றும், இது உலக எங்கிலும் உள்ள பல வளர்ந்த நாடுகளின் விகிதத்திற்கு சமம் மற்றும் அமெரிக்காவை விட சிறந்தது” என்றும், ஆதாரத்துடன் அவர் பகிர்ந்து உள்ளார்.

முக்கியமாக, “கேரளா சரியான காரணங்களுக்காக நிற்பதால், தனித்து நிற்கிறது” என்றும், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பாஜகவிற்கு பதிலடி கொடுத்து உள்ளார்.

மிக முக்கியமாக, உத்தரப் பிரதேச மாநிலம் கேரளாவைப் போல மாறினால், அங்கு சமூக நலம் மேம்படும், வாழ்க்கைத் தரம் உயரும், சமூகத்தில் ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிலவும், ஜாதி, மதத்தின் பெயரால் யாரும் கொலை செய்யப்பட மாட்டார்கள் என்றும், அது போல வளர்ச்சியடைந்த அமைதி சூழ்ந்த மாநிலத்தைத் தான் மக்களும் விரும்புவார்கள்” என்றும், பாஜக முதலமைச்சரான யோகிக்கு தன்னுடைய டிவிட்டரில் பதிவின் மூலமாக சரியான பதிலடி கொடுத்துள்ளார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன். 

இதனிடையே, உத்தரப் பிரதேச பாஜக முதலமைச்சரான யோகிக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மத்திய அரசின் ஆதரத்தோடு  தன்னுடைய டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளது, இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.