கணவன் - மனைவி பிரிந்து ஆளுக்கொரு திருமணம் செய்துகொண்ட நிலையில், ஒரு தம்பதிக்கு மட்டும் குழந்தை பிறந்து மற்றொரு தம்பதிக்குக் குழந்தை பிறக்காத விரக்தியில், முன்னாள் மனைவியின் இரண்டாவது கணவருக்குப் பிறந்த பெண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் சமராஜ நகர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது உடைய மகேஷ், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கவுரம்மா என்ற பெண்ணை இரு வீட்டார் முறைப்படி முறைபடி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

ஆனால், அதன் தொடர்ச்சியாக மகேஷ் - கவுரம்மா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஒரு கட்டத்திற்கு மேல் இருவரும் சேர்ந்து வாழ முடியாமல் முறைபடி விவாகரத்து பெற்று இருவரும் தனித் தனியாக பிரிந்து சென்று உள்ளனர். 

இதனையடுத்து, கவுரவம்மா என்ற பெண், அந்த பகுதியைச் சேர்ந்த ஸ்வாமி மாலியநாயகர என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.அதேபோல், மனைவி கவுரவம்மாவை பிரிந்த மகேஷும், ரத்னம்மா என்ற பெண்ணை 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.

இப்படி கணவன் - மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருவருமே ஆளுக்கொரு திருமணம் செய்து கொண்ட நிலையில், கவுரவம்மா - ஸ்வாமி மாலியநாயகர தம்பதியினருக்கு மஹாலட்சுமி என்ற ஒரு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது.

ஆனால், மகேஷ் - ரத்னம்மா தம்பதிக்கு 2 வது திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியம் அவர்களாக்கு குழந்தை பிறக்க வில்லை. இதனால், தன்னுடைய முதல் மனைவியைப் பார்த்துப் பொறாமைப்பட்ட மகேஷ், தன் முதல் மனைவியின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையைக் கெடுக்கத் திட்டமிட்டார். 

அதன்படி, தன் முதல் மனைவி கவுரம்மா மற்றும் அவரது 2 வது கணவருக்குப் பிறந்த பெண் குழந்தையைக் கொல்ல மகேஷ் திட்டமிட்டார். 

திட்டமிட்டபடி, தன் முன்னாள் மனைவி கவுரம்மா வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, அவர்களின் வீட்டிற்குள் புகுந்த மகேஷ், சிறுமி மஹாலட்மியை தன்னுடைய 2 வது மனைவி ரத்னம்மாவுடன் சேர்ந்து, அந்த வீட்டில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தள்ளி விட்டி துளியம் இறக்கம் இல்லாமல் கொலை செய்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, சிறுமி மஹாலட்மியின் உடலை பிளாஸ்டிக் பையில் சுற்றி தங்கள் வீட்டிற்குக் கொண்டு சென்று மறைத்து வைத்து உள்ளனர்.

இதனையடுத்து, மாலை வீடு திரும்பிய கவுரம்மா தன் குழந்தை வீடு முழுவதும் தேடி உள்ளார். குழந்தையை எங்குத் தேடியும் கிடைக்காததால், அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். அத்துடன், தன்னுடைய முதல் கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், அவர் கூறி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, போலீசார் மகேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனையடுத்து, மகேஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ரத்னம்மாவை போலீசார் கைது செய்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது.