பாலியல் பலாத்காரம் குறித்து சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

priyanka gandhi

கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று விவசாயிகள் பிரச்சினை எழுப்பப்பட்டது. விவசாயிகள் பிரச்சினை குறித்து விரிவாக ஆலோசிக்க நேரம் ஒதுக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது பேசிய சபாநாயகர் விஸ்வேஸ்வர ஹெக்டே நீங்கள் என்ன முடிவு செய்தாலும் நான் ஆம் என்று தான் சொல்வேன். இப்போது இங்கு இருக்கும் நிலைமை என் கட்டுப்பாட்டை மீறிவிட்டது. இதை நான் சமாளிக்க முடியாது. அதனால் அமைதியாக நடப்பதை அனுபவிக்கலாம் என முடிவு செய்துவிட்டேன் என்றார். மேலும் சபாநாயகர் நான் சபையில் நிலைமையைக் கட்டுப்படுத்துவதைக் கைவிட்டு ஒழுங்கான முறையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் உங்கள் பேச்சுகளைத் தொடருமாறு எல்லோரிடமும் சொல்ல வேண்டும். எல்லோருக்கும் பேச நேரம் அளித்தால் சபையை எவ்வாறு நடத்துவது? இந்த சபையின் அலுவல்கள் நடக்கவில்லை என்பது தான் தன் மனக்குறை என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்எல்ஏ கேஆர் ரமேஷ் குமார் ஒரு சொலவடை இருக்கிறது. பாலியல் பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் அமைதியாகப் படுத்து அனுபவிக்க வேண்டும் என்று நீங்களும் அந்த நிலையில் தான் இருக்கிறீர்கள் என சபாநாயகரைப் பார்த்துப் பேசினார். காங்கிரஸ் எம்.எல்.ஏவின் இந்த மோசமான கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்தனர். எம்.எல்.ஏ. ரமேஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும்  வலியுறுத்தினர். சமூக வலைத்தளங்களிலும் ரமேஷ்குமாரின் பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் பாலியல் பலாத்காரம் குறித்து சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கர்நாடாகா எம்எல்ஏ ரமேஷ்குமார் பேச்சை முழுமனதுடன் கண்டிக்கிறேன். இப்படியான வார்த்தைகள் ஒருவரால் எப்படிப் பேச முடிந்தது என்பதே விவரிக்க இயலாதது. அந்தப் பேச்சுக்கு அவரை யாரும் பாதுகாக்க மாட்டார்கள். பாலியல் பலாத்காரம் ஒரு கொடுங் குற்றம். அவ்வளவே. என்று பதிவிட்டுள்ளார்.