உல்லாசமா இருந்துட்டு விலகிச் செல்ல நினைத்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், அவரது கள்ளக் காதலி மிரட்டியதால் அவரை கொலை செய்த வீசி எரிந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் செயல்பட்டு வரும் ஒரு காவல் நிலையத்தில் 39 வயதான தர்மேந்திர குமார் சிங் என்பவர், உதவி சப் இன்ஸ்பெக்டர் பணியாற்றி வந்தார்.

பீகார் மாநிலத்தைப் பூர்வமாக கொண்ட 39 வயதான தர்மேந்திர குமார் சிங், தனது குடும்பத்தை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில் தான், தெற்கு பூங்காவில் வசிக்கும் 32 வயதான வர்ஷா என்ற பெண்ணுடன், 39 வயதான தர்மேந்திர குமார் சிங்கிற்கு முறையற்ற கள்ளத் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்கள்.

அந்த கள்ளத் தொடர்பு பழக்கத்தில், வர்ஷாவின் வீட்டில் சில நாட்கள் தர்மேந்திர குமார் சிங் தங்கியிருப்பதும், அடிக்கடி வந்து செல்வதுமாக இருந்த நிலையில், கள்ளக் காதலி வர்ஷா அந்த போலீசாரிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், அந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், அந்த பெண்ணின் வீட்டுக்கு செல்வதை மெல்ல மெல்லத் தவிர்த்து வந்திருக்கிறார். 

ஆனாலும், அந்த பெண் மீண்டும் மீண்டும் அந்த போலீஸ்காரரிடம் பணம் கேட்டு பிளாக் மெயில் செய்து வந்திருக்கிறார்.

அத்துடன், தனது சொந்த ஊரான பீகாருக்கும் அவரை செல்ல விடாமல், அந்த காதலி தொடர்ந்து தடுத்து வந்திருக்கிறார்.

இது, இப்படியே தொடரவே ஒரு கட்டத்தில் கடும் ஆத்திரமடைந்த அந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தர்மேந்திர குமார் சிங், காதலி வர்ஷாவை தனியாக ஒரு இடத்திற்கு வர சொல்லியிருக்கிறார்.

அதன்படியே, அந்த பெண் அங்கு தனியாக வரவே, அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்துகொண்ட அவர், முதலில் அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதற்குப் பதிலுக்கு அந்த பெண்ணும் சண்டை போடவே, இன்னும் கோபம் அடைந்த அந்த நபர், அந்த பெண்ணை தலையை நசுக்கி கொலை செய்துவிட்டு, அவரின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, அந்த பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வீசிவிட்டுச் சென்றிருக்கிறார்.

இதனையடுத்து, அந்த பகுதியைச் சேர்ந்த போலீசாருக்கு பெண் சடலம் கிடப்பது பற்றி தகவல் வந்ததை அடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த விசாரணையில், அந்த பெண்ணை கொலை செய்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தர்மேந்திர குமார் சிங்கை அதிரடியாகக் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.