இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகளாக இரு மடங்கு அளவுக்கு உயர்ந்துள்ளதாக ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று என்பது, உயிரை மட்டும் எடுப்பதல்ல, உயிரோடு விட்டு வைத்தாலும், அவர்களைப் பொருளாதார ரீதியான நெருக்கடிகளைத் தந்து, மிகப் பெரிய ஏழையாகவும் மாற்றும் சக்தி படைத்த நோயாகப் பார்க்கப்படுகிறது இந்த கொரோனா என்னும் வைரஸ் நோய்.

அந்த வகையில், கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினர் அதாவது தினசரி வருமானம் 725 ரூபாய் முதல் 1,450 ரூபாய் வரை வருமானம், தற்போது மூன்றில் ஒரு பங்காக சுருங்கி விட்டதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. 

அத்துடன், கொரோனா நோய் தொற்று காரணமாக, தூண்டப்பட்ட மந்த நிலையால் நாட்டின் ஏழைகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து உள்ளது என்பதும், இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்ட இலாப நோக்கற்ற “பியூ ரிசர்ச்” அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.

அதன் படி, “கொரோனா நோய் தொற்றுக்கு முன்பாக கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் 9.9 கோடி மக்கள், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்து வந்தனர்” என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. 

பியூவின் ரிசர்ச் கூற்றுப்படி, “இந்த எண்ணிக்கையானது, தற்போது 6. 6 கோடியாக அதிகமாக இருக்கும்” என்று தற்போது மதிப்பிடப்பட்டு உள்ளது.

“கொரோனா நோய் வீழ்ச்சியின் காரணமாக, இந்தியாவின் நடுத்தர வர்க்கம் 3.2 கோடிக்கும் அதிகமாகக் குறைந்து உள்ளது” என்றும், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அத்துடன், “இது, நடுத்தர வருவாய் அடுக்கில் உள்ள மக்களின் எண்ணிக்கையில் அதுவும் உலகளாவிய அளவில் 60 சதவீத அளவுக்கு சரிவு கண்டுள்ளது” என்றும் மதிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், “கொரோனா மந்த நிலை காரணமாக, இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை என்பது, அதாவது தினசரி வருமானம் 145 ரூபாய் அல்லது அதற்கும் குறைவாக வருமானம் பெறுபவர்களின் எண்ணிக்கையானது 7.5 கோடியாக உயர்ந்து உள்ளதாக தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் உலக வறுமை அதிகரிப்பில் கிட்டத்தட்ட 60 சதவீதம்” என்றும், தறபோது மதிப்பிடப்பட்டு உள்ளது. 

அதே போல், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ், வேலைக்கான கோரிக்கை அதன் தொடக்கத்தில் இருந்து மிக அதிகமாக உள்ளது” என்றும், அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக, “ இனி, இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை 13.4 கோடியை எட்டும் என்றும், எதிர்பார்க்கப்படுவதாகவும், இந்த மந்த நிலைக்கு முன்பு  மதிப்பிடப்பட்ட 5.9 கோடிக்கும் அதிகமாகும்” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை இந்தியாவும் சீனாவும் ஒன்றாகக் கொண்டிருப்பதால், பியூ ரிசர்ச் இரு நாடுகளையும் ஒன்றாக ஆய்வு செய்தது.
 
இந்த ஆய்வின் படி, “இந்தியா ஆழ்ந்த மந்த நிலையில் மூழ்கியிருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. சீனாவால் அதன் மந்த நிலையில் இருந்து வெகு விரைவில் திரும்ப முடிந்தது” என்பதும், இந்த ஆய்வறிக்கையின் மூலமாகத் தெரிய வந்திருக்கிறது.

மிக முக்கியமாக, “கொரோனா நோய் தொற்றுக்கு முன்பு கடந்த 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது 5.8 சதவீதம் என்றும், சீனாவில் 5.9 சதவீதம்” என்றும், உலக வங்கி சமமான வளர்ச்சியை மதிப்பிட்டு உள்ளது. 

“ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு இந்தியாவுக்கு மைனஸ் 9.6 சதவீதமாகவும், சீனாவுக்கு 2 சதவீதம்” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.