கடந்த வாரம் போதைப்பொருள் மருந்துகளின் ஆணையத்தின் 63வது கூட்டம் ஜக்கிய நாட்டு சபையில் நடைப்பெற்றது. இதில் 53 உறுப்பு நாடுகள் இருக்கிறது. இந்த கூட்டத்தில் சர்வதேச அளவில் கஞ்சாவை ஒழுங்குபடுத்தும் வகையிலான நடவடிக்கைகள் எடுப்பது முக்கிய அம்சமாக விவாதிக்கப்பட்டது. 


இது தொடர்ப்பாக கஞ்சாவை ஆபத்தான போதைப்பொருள் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு வாக்கெடுப்பு நடைப்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட 27 நாடுகள் ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிருந்து கஞ்சாவை நீக்குவதற்கு ஆதரவாகவும் மற்றும் பாகிஸ்தான், சீனா , ரஷ்யா போன்ற நாடுகள் கஞ்சா ஆபத்தான போதை பொருள் தான் என எதிராகவும் வாக்களித்திருக்கிறது. 


இதில் இந்தியா, கஞ்சாவை ஆபத்தான போதைப்பொருள் பட்டியலிருந்து நீக்குவதற்கு ஆதரவாக வாக்களித்திருப்பது சற்று அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. அதற்கு காரணம் இந்தியாவில் கஞ்சா பயன்படுத்துவது சட்டரீதியாக அங்கிகரீகப்பட்டவில்லை. இன்றளவு இந்தியாவில் கஞ்சா தடைசெய்யப்பட்ட போதைப் பொருளாக தான் இருக்கிறது. ஆனால் மறுப்பக்கம் ஜக்கிய நாடு கூட்டங்களில் கஞ்சாவை ஆபத்தான போதை பட்டியலிருந்து நீக்க இந்தியா வாக்கு அளித்திருப்பது முரணாக இருக்கிறது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.  


‘’ கஞ்சாவில் இருக்கும் மருத்துவ குணங்களை பயன்படுத்துவதற்க்காக, ஏறதாழ 60 ஆண்டு காலம் கஞ்சா மீது நீடித்து வரும் கடுமையான கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுக்கான தேவை எழுந்துள்ளது. இதையொட்டி தான் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பெற்று முடிவானது உறுப்பு நாடுகளின் தனிப்பட்ட தேவை மற்றும் விருப்பம் சார்ந்தது” என்று ஜ.நா தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.


ஆபத்தான போதை பொருட்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்குவதற்கு இந்தியா வாக்குளித்திருந்தாலும், கஞ்சா செடி வளர்ப்பது, பயன்படுத்துவது, விநியோகிப்பது மீதான தடையை இந்திய அரசு நீக்கவில்லை.