“கொரோனா தாக்கிய அடுத்து 2 வாரத்தில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரித்துள்ளதாக” ஆய்வில் தெரியவந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா உட்பட கொரோனா என்னும் பெருந் தொற்று பரவத் தொடங்கியது முதல், நாள் தோறும் புது புதுத் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.

ஒட்டு மொத்த உலக பொருளாதாரம் தொடங்கி, தனி மனித பொருளாதாரம் வரை, இயல்பு வாழ்க்கையே முற்றிலுமாக முடக்கப்போட்டு, மனித உயிர்களை
வேட்டையாடி விளையாடி வருகிறது கொரோனா என்னும் கொடிய பெருந்தொற்று, பல்கி பெறுகி இந்தியாவில் மட்டும் கிட்டதட்ட 230 வகையான வைரஸ்
கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரோனா சற்று அதிகரித்திருப்பதால், நாட்டில் 3 வது அலை ஆரம்பித்துவிட்டதா
என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு, அதன் பிறகு வேறு சில நோய்களும் பரவும் என்றும், கடந்த காலங்களில் பல தகவல்கள் வெளியாகி,
பொது மக்களிடையே கடும் பீதியையும் ஏற்படுத்தியது.

அந்த வகையில் தான், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும் கரும் பூஞ்சையை தொற்று பரவத் தொடங்கியது.

த் தொடர்ந்து வெள்ளை பூஞ்சை பாதிப்பு இந்தியாவில் பரவத் தொடங்கி உள்ளதால், அதிக பாதிப்பை ஏற்படுத்துமா என்கிற அச்சம் மருத்துவர்கள் மற்றும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் தொற்றிக்கொண்டு உள்ளது.

அதாவது, இந்தியாவில் கொரொனா பாதிப்பிலிருந்து குணமடைந்த பலருக்கும் கரும் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பலரும் கரும் பூஞ்சையைத்
தொடர்ந்து வெள்ளை பூஞ்சை என்னும் புதிய வகை நோயால் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

அதே போல், “இந்த கொரோனா தடுப்பூசியால் ஆண்களுக்கும், பெண்களுக்கும் பக்க விளைவாக மலட்டுத்தன்மை வருமா?” என்கிற மிகப் பெரிய கேள்வியும்,
சமீபத்தில் பொதுமக்களிடையே எழுந்தது.

அத்துடன், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்கள், இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாமா?” என்கிற சந்தேகமும் கடந்த சில மாதங்களாக எழுந்து,
பின்னர் அப்படியே மறைந்தது. 

பின்னர், “கொரோனா தடுப்பூசியால் ஆணுக்கோ, பெண்ணுக்கோ மலட்டுத்தன்மை வரும் என்பதற்கு எந்த விதமான அறிவியல் பூர்வமான ஆதாரம் எதும்
கிடையாது” என்று, மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்தது.

குறிப்பாக, “கொரோனா 2 வது அலையில் இளைஞர்கள் ஏன் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்?” என்பது குறித்து, மருத்துவர்களும் சிலர் தொடர்ச்சியாக விளக்கம் அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தான், கொரோனா தாக்கிய 2 வாரத்தில், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது. 

இது தொடர்பாக “தி லேன்செட்” என்னும் பத்திரிகையில் ஆய்வுத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில், “கொரோனா வைரஸ் தொற்று ஒருவரைத் தாக்கிய முதல் 2 வாரங்களில், அவர்களுக்கு மாரடைப்பும் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரித்து
உள்ளதாக” அந்த பத்திரிகையில் ஆய்வுத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இது தொடர்பான ஆய்வை நடத்திய சுவீடன் நாட்டின் “உமேயா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒஸ்வால்டோ பொன்சேகா ரோட்ரிக்ஸ்” கூறியுள்ள கருத்தில்,
“கொரோனா வைரஸ் தொற்று தாக்கிய முதல் 2 வாரங்களில் மாரடைப்பும், பக்கவாதமும் ஏற்படும் ஆபத்து 3 மடங்கு தற்போது அதிகரித்து இருப்பதை நாங்கள்
கண்டறிந்துள்ளோம்” என்றும், அவர் கூறியுள்ளார்.

அதே போல், மற்றொரு ஆராய்ச்சியாளரான காட்சூலாரிஸ், “கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவது எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் முடிவுகள்
காட்டுகின்றன என்றும், அதன் படி, மிக கடுமையான இதய பாதிப்பு மற்றும் அதனால் ஆபத்தில் இருக்கிற முதியவர்கள் தடுப்பூசி போடுவது மிகவும் முக்கியம்”
என்றும், அவர் வலியிறுத்தி உள்ளார்.