இந்தியாவின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட் மற்றும் உணவு டெலிவரியில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது ஸ்விக்கி. இந்த நிறுவனங்களின் விற்பனையாளர்கள் மீது எழுந்த வரி ஏய்ப்பு புகாரால் பெங்களூருவிலுள்ள ஸ்விக்கி மற்றும் ஃப்ளிப்கார்டின் துணை நிறுவனமான இன்ஸ்டாகர்ட் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 


வருமான வரித்துறைக்கு தேவையான அனைத்து விவரங்களும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என்று ஃப்ளிப்கார்ட் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.