மனைவி உடனான கள்ளக் காதலை கை விடும்படி கணவன் எச்சரித்த நிலையில், கள்ளக் காதலான் அடம்பிடித்து காதலை தொடர்ந்ததால், கடுப்பான கணவன் அவரை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் தாலுகா மைலப்பனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான வெங்கடேஷ், அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். வெங்கடேஷ்க்கு திருமணம் ஆன நிலையில், மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். 

இந்த நிலையில், வெங்கடேசன் மனைவிக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான அர்ஜூன் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறியிருக்கிறது. 

இதனையடுத்து, கணவன் வெங்கடேஷ் வேலைக்கு சென்றதும், அவரது மனைவியுடன், அர்ஜூன் தொடர்ந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்து உள்ளார் என்று, கூறப்படுகிறது. இப்படியாக, அவர்களது உல்லாச வாழ்க்கை பல மாதங்களாகத் தொடர்ந்துகொண்டே சென்று உள்ளது.

இந்த கள்ளக் காதல் விசயம், எப்படியோ கணவன் வெங்கடேஷிற்கு தெரிய வந்து உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர், தன் மனைவியை கண்டித்து உள்ளார்.

அத்துடன், “என் மனைவி உடனான கள்ளக் காதலை கை விடும்படி” அர்ஜூனை நேரில் பார்த்து வலியுறுத்தி இருக்கிறார். ஆனால், இதனை ஏற்க கள்ளக் காதலன் அர்ஜூன் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அர்ஜூனை மீண்டும் சந்தித்துப் பேசிய வெங்கடேஷ், “எனது மனைவியுடனான கள்ளக் காதலை கை விடும்படி” மீண்டும் வற்புறுத்தியிருக்கிறார்.

ஆனால், அப்போதும் அர்ஜூன் மறுத்து விட்டு, திமிராகப் பேசியிருக்கிறார். இதனால், கடும் ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தி, மற்றும் பிளேடால் அர்ஜூனை தாக்கி, அவரின் கழுத்தை அறுத்து உள்ளார்.

இதில், படுகாயம் அடைந்த அர்ஜூன், ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்து உயிருக்குப் போராடி உள்ளார். 

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், அர்ஜூனை உடனடியாக மீட்டு அருகில் உள்ள சிக்பள்ளாப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதனையடுத்து, உயர் சிகிச்சைக்காகப் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன், இது தொடர்பாக சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அர்ஜூனின் கழுத்தை அறுத்துவிட்டு, தற்போது தலைமறைவாக இருக்கும் வெங்கடேசையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.