தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வாரம் புதன்கிழமை இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பலர் பலியானார்கள். அந்த வெள்ளம் வடிந்து முடிந்த சமயத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து மீண்டும் அங்கு கனமழை பொழிந்தது. 

வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக ஹைதராபாத் நகரில் 191.8 சென்டி மீட்டர் அளவிற்கு மழை பெய்துள்ளது. கடந்த நூறு ஆண்டுகளில் இந்த அளவில் ஹைதராபாத்தில் மழை பெய்யவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இந்த தொடர் கனமழையால் காரணமாக, நகரில் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களுடைய நித்திய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக வீடுகளை விட்டு வெளியில் வர இயலாத நிலை தொடர்கிறது. மேலும் சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும்பணிகள் நடைபெறுகின்றன சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அகற்றும்பணிகள் நடைபெறுகின்றன.

ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி விட்ட நிலையில் சாலைகளில் வெள்ளநீர் ஆறுகள் போல ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள், குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஆகியவற்றை மழை வெள்ளம் அடித்துச் சென்ற காட்சிகளை காணமுடிந்தது. 

பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மின் வினியோகம் தடைபட்டு பொதுமக்கள் இருட்டில் அடைபட்டுக் கிடக்கின்றனர். பால், காய்கறி, பழங்கள், குழந்தைகளுக்கான உணவுகள் ஆகியவை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் ஹைதராபாத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் முற்றிலுமாக தடைபட்டு விட்டது. 

தெலங்கானா மாநில அரசு மாவட்ட ஆட்சியர்கள், உயரதிகாரிகள் ஆகியோர் 24 மணி நேரமும் முழு எச்சரிக்கையுடன் வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஹைதராபாத் மகா நகரம் மொத்தமாக வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. எனவே தாழ்வான பகுதிகள் மற்றும் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகள் ஆகியவற்றில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதில் பெரும் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. 

ஹைதராபாத் நகரம், இந்தாண்டில் இரண்டாவது முறையாக கடும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளது. ஹபீஸ் பாபா நகர், பூல்பாக், உமர் காலனி, இந்திரா நகர், சிவாஜி நகர், ராஜீவ் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகள், வெள்ளத்தில் மிதக்கின்றன.

சாலைகளில் ஆற்று வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கனமழைக்கு இரண்டு சிறார்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் மட்டும் 37 ஆயிரம் குடும்பங்கள், வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தின் பல இடங்களில் வரும் 21ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தெலுங்கானா, ஆந்திராவை போல கர்நாடகாவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குல்பர்கா மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பீமா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றை ஒட்டியுள்ள பல்வேறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அங்கு வசிக்கும் மக்களை மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இது குறித்து அம்மாநில உள்ளாட்சித்துறை அதிகாரிகள், போலீஸாா் கூறியதாவது:

ஹைதராபாத் நகரில் சனிக்கிழமை மாலை முதல் பலத்த மழை கொட்டியதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கியவா்களை பேரிடா் மீட்புப் படையினா், மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீஸாா் மீட்டனா்.

பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளில் தண்ணீா் புகுந்தது. சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீா் தேங்கியது. சில ஆட்டோக்கள் வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டன. கனமழை காரணமாக மங்கல்ஹாட் பகுதியில் வீட்டின் சுவா் இடிந்து விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்தாா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநிலத்தின் சில பகுதிகளில் அக்டோபா் 21-ஆம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. சனிக்கிழமை ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 16.9 செ.மீ மழையும், ஹைதராபாத் விமான நிலையத்தில் 7.2 செ.மீ மழையும் பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியது.

கடந்த வாரம் ஹைதராபாத் மற்றும் மாநிலத்தின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பலத்த மழை கொட்டி தீா்த்தது. ஹைதராபாதில் 1916-ஆம் ஆண்டுக்கு பிறகு 20 செ.மீ மழை பதிவாகியது. பல இடங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்த விபத்தில் 50 போ் பலியாயினா். மேலும், மழை காரணமாக ரூ.5,000 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டதாக மாநில அரசு தெரிவித்தது.

இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 10 கோடி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  இதுகுறித்து முதல்வர் பழனிசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 

``தெலங்கானாவில் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. 
மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். 

மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தெலங்கானா அரசு சிறப்பாக செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தெலங்கானாவுக்கு தமிழக அரசு துணை நிற்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலங்கானாவுக்கு ரூ. 10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.