தந்தையின் கார் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் எல்.பி. நகர் மன்சூர் பாத் பகுதியைச் சேர்ந்த லஷ்மன் என்ற நபர், தனது குடும்பத்துடன் அங்குள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் சாத்விக் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

இப்படியான சூழ்நிலையில், தனது அடுக்குமாடி குடியிருப்பிற்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த தனது காரை, அவர் எடுத்திருக்கிறார்.

அப்போது, அவரது 4 வயது  மகன் சாத்விக், தந்தையின் பின்னாடியே ஓடி வந்திருக்கிறார். ஆனால், தனது மகன் தனக்கு பின்னாடியே ஓடி வருவதை, தந்தை லஷ்மன் அதனை கவனிக்கவில்லை. 

அத்துடன், லஷ்மன் தனது காருக்குள் ஏறி காரை இயக்க முற்பட்ட போது, அவரது 4 வயது குழந்தை சாத்விக், காருக்கு முன்பு ஓடி வந்திருக்கிறார். 

ஆனால், இதனை சற்றும் கவனிக்காமல் தந்தை லஷ்மன், தனது காரை எடுத்திருக்கிறார். அப்போது, அந்த காரில் எதிர்பாராத விதமாக காரின் முன் பகுதியில் உள்ள சக்கரத்தில் அந்த 4 வயது சிறுவன் சாத்விக் சிக்கியிருக்கிறார். 

அத்துடன், காருக்குள் குழந்தை சிக்கிக்கொண்ட மறு நிமிடமே, அந்த குழந்தை பயந்துபோய் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு கத்தி அழுது துடித்து உள்ளது. 

குழந்தை அழும் சத்தத்தைக் கேட்டுப் பதறித் துடித்த அவரது தந்தை லஷ்மன், தனது காரை உடனடியாக அப்படியே நிறுத்திவிட்டு, காருக்கு வெளியே வந்து பார்த்திருக்கிறார்.

அப்போது தான், தனது குழந்தை காருக்குள் சிக்கியிருப்பது அவருக்கு தெரிய வந்தது. இதனால், பதறித்துடித்த அந்த தந்தை, காருக்குள் சிக்கிய சிறுவன் சாத்விக்கை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். 

ஆனால், அந்த குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.