வீட்டிற்கு வேறொரு பெண்ணை அழைத்து வந்த கணவன், தனது மனைவி முன்னாடியே உல்லாசமாக இருந்ததால் கடும் அதிர்ச்சியடைந்து சண்டைபோட்ட மனைவியைக் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா ஜால்யா கிராமத்தைச் சேர்ந்த சுவாமி என்பவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்குப் பிறகு தொடக்கத்தில் கணவன் - மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவர்களது வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு புயல் வீசத் தொடங்கியிருக்கிறது. இதனால், கணவன் - மனைவி இடையே, தினமும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்களுக்குள் பிரச்சனை எழுந்துகொண்டே இருந்தது.

ஆனாலும், கணவன் சுவாமி தனது மனைவி 29 வயதான கவிதா, தாயார் யசோதம்மா, தம்பி சுனிலுடன் ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கிறார். இப்படி, ஒரே குடும்பமாக வசித்து வந்தாலும், கணவன் - மனைவி இடையே தொடர்ந்து சண்டை நடந்துகொண்டே இருந்து உள்ளது.

இதனால், மனம் வெறுத்துப்போன கணவன் சுவாமி, நேற்று முன் தினம் இரவு வேறொரு பெண்ணுடன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். தனது கணவன் சுவாமி, வேறொரு பெண்ணுடன் வீட்டிற்கு வருவதைப் பார்த்த அவர் மனைவி கவிதா, அப்படியே அதிர்ச்சியாகி நின்று உள்ளார். 

இதனையடுத்து, தான் கூட்டி வந்து பெண்ணுடன் சுவாமி தனது வீட்டிலேயே உல்லாசம் அனுபவித்து உள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி கவிதா, தனது கணவனிடம் சண்டைக்கு சென்று உள்ளார். அந்த நேரத்தில், சுவாமிக்கு ஆதரவாக அவருடைய தாயார் யசோதம்மா, தம்பி சுனில் ஆகியோர் பேசி உள்ளனர். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த கவிதா, அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே, கணவர் சுவாமி, தாய் மற்றும் தம்பி ஆகியோருடன் சேர்ந்து தனது மனைவி கவிதாவை அவர்கள் அடித்து உதைத்து உள்ளனர். 

அத்துடன், கவிதை “வீட்டை விட்டு வெளியே போ” என்று, மிரட்டி உள்ளனர். இது தொடர்பாக அவரை மீண்டும் கொடுமைப்படுத்தி உள்ளனர்.

கணவன் மற்றும் கணவனின் குடும்பத்தினர் தாக்கியதில் காயம் அடைந்த கவிதா, தனது உடலில் உள்ள ரத்த காயத்துடன் அந்த வீட்டை விட்டு வெளியேறாமல், அங்கேயே இருந்து உள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மருத்துவமனை தரப்பில் இருந்து, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், பாதிக்கப்பட்ட கவிதாவிடம் விசாரணை நடத்தி, அவரது கணவர் சுவாமி மற்றும் அவரது தாயார் மற்றும் தம்பியை அதிரடியாகக் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.