சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பெண்களின் தொலைப்பேசி எண்கள் எந்த வகையில் எப்படியெல்லாம் வெளியில் பரவுகிறது என்பது குறித்து ஒரு விழிப்புணர்வு பார்வையை தற்போது பார்க்கலாம்.

சர்வதேச மகளிர் தினம் இன்று, உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால், தங்களது வீட்டில் உள்ள பெண்களை அந்தந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்றைய தினம் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 

அதிலும் குறிப்பாக, தடைகளை தாண்டி தடம் பதிக்கும் பெண்களை, அவர்களது வெற்றிக்கு பின்னாள் துணை நிற்கும் தந்தையர்களும்,  கணவன்மார்களும், மகன்களும் என ஒவ்வொரு ஆண்களுமே கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த சூழலில் தான், ஒரு வழிப்புணர்வு பார்வையாக, தடைகளை தாண்டி தடம் பதிக்கும் பெண்கள் முதல் சாதாரண பெண்கள் வரை அவர்களது செல்போன் எண்கள் எப்படி? எந்த வழியில் எல்லாம் பரவுகிறது என்பது குறித்து இங்கே தற்போது பார்க்கலாம்.

அந்த வகையில்,

- பெண்கள் தங்களது செல்போன் எண்களை ரீசார்ஜ் செய்யும்  இடங்களில் இருந்து அதிகமாக பரவுகிறது என்று கூறப்படுகிறது.

- சாதிக்கத் துடிக்கும் பெண்கள், தங்களது திறமைகளை நிறுபிக்கும் விதமாக, பல்வேறு போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்யும் போது, அங்கிருந்து வெளியே பரவுகிறது என்றும் கூறப்படுகிறது.

- சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், அதிலும் முக்கியமாக வாட்ஸ்ஆப் குரூப்புகள் மூலமாகவும் பரவுகிறது என்றும் சொல்லப்படுகிறது.

- கால் டாக்சி, ஹோம் டெலிவரி போன்ற இடங்களில் செல்போன் நம்பர் பதிவு செய்யப்படுவதால், அங்கிருந்தும் பரவுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- ஆன்லைன் சாட்டிங் மற்றும் ஆன்லைன் ஆப் மூலமாகவும் பெண்களின் நம்பர் பகிரப்படுவதாகவும் கூறப்படுகிறது.

- ஷாப்பிங் செய்யும்போதும் பெண்களின் செல்போன் எண்கள் பகிரப்படுகிறது.

- ஹோட்டல் முன்பதிவின்போதும், தொலைப்பேசி எண்கள் பகிரப்படுகிறது.

- விழாக்களில் கலந்துகொள்ள நேரிடும் போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் பார்வையாளர்கள் வருகை பதிவு நோட் புத்தகம் மூலமாகவும் பெண்கள் தொலைப்பேசி எண்கள் பகிரப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இப்படியாக பகிரப்படும் பெண்கள் தொலைப்பேசி எண்களால், சம்மந்தப்பட்ட பெண்ணிற்கு, ஒரு ஆண் நபரால் குறைந்தபட்சம் ஒரு முறை முதல் அதிகபட்சமாக ஒரு வாரத்தில் 7 முறை வரை தொந்தரவு செய்யப்படுகிறார்கள் என்றும், சமீபத்தில் எடுத்த கருத்துக்கணிப்புகள் மூலமாக தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது.