“ஒமைக்ரான் வைரஸ் தொற்று குணமானாலும், மீண்டும் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது” என்று, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

இந்தியா உட்பட கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 29,870 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டனர்.

இதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 30,72,666 ஆக அதிகரித்து உள்ளது. 

அத்துடன், தமிழகத்தில் நாளை முதல் வரும் வாரத்திற்கு கொரோனா வைரஸ் புதிய உச்சத்தைத் தொடரும் என்றும், நேற்றைய தினம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், “கொரோனா வைரஸை பொருத்த வரை, அது மீண்டும் தாக்குதல் என்பது புறக்கணிக்க முடியாத ஒன்று” என்று சுகாதார நிபுணர்கள், தற்போது எச்சரித்து உள்ளனர். 

இதனால், “கொரோனாவிலிருந்து சமீபத்தில் மீண்டு இருந்தாலும், கொரோனா விதி முறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியம்” என்றும், சுகாதார நிபுணர்கள், தற்போது எச்சரித்து உள்ளனர்.

அதாவது, ஒமைக்ரான் வைரஸ் தொற்று நோயானது இந்தியா முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக்கொண்டிருக்கிறது. 

இதன் காரணமாக, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் தொற்று பாதிப்பில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, கொரோனா விதி முறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், நிபுணர்கள் தற்போது அறிவுறுத்தி உள்ளனர். 

இது தொடர்பாக அறிவுறுத்தி உள்ள மகாராஷ்டிரா கொரோனா தடுப்புக் குழு மருத்துவரான டாக்டர் ஷாஷாங்க் ஜோஷி பேசும் போது, “சமீபத்தில் ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் மாஸ்க் அணியாமல் எங்கும் செல்லக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “கொரோனாவின் அனைத்து வகைகளிலுமே, மீண்டும் கொரோனா தொற்று பரவும் என்பதைஈ நம் யாராலும் தடுக்க முடியாது” என்றும், அவர் எச்சரிக்கையாகவே கூறியுள்ளார்.

அதே போல், மற்றொரு மருத்து நிபுணரான டாக்டர் ராகுல் பண்டிட் இது பற்றி பேசும் போது, “இது வரை இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதாக பதிவாகவில்லை என்றும், என்றாலும் மற்ற கொரோனா வகைகளைப் போல் அதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது” என்றும், குறிப்பிட்டார். 

இதனால், “மாஸ்க் அணிதலும், சமூக இடைவெளியை கடைபிடித்தலுமே கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாக்கும்” என்றும்,  டாக்டர் ராகுல் பண்டிட் வலியுறுத்தி உள்ளார். 

இதனால், ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள், இனியும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.