இன்ஸ்டாகிராம் மூலம் 70 பெண்களை மயக்கிய மன்மதனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

ஐதராபாத்தில் தான், இப்படி ஒரு காதல் மன்மதன் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளான்.

தெலங்கானா மாநிலம் மணிகோண்டாவைச் சேர்ந்த சுமந்த் என்கிற இளைஞர், அமேசானில் பணியாற்றி வருகிறார். 

இவர், சமீபத்தில் இளம் பெண்கள் மீது சபலப்பட்டு உள்ளார். இதனால், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் பெண் பெயரில் ஒரு போலியதன கணக்குகளைத் தொடங்கி, இளம் பெண்கள் பலருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறார். 

அதன் பிறகு, அழகான இளம் பெண்களிடம் பெண்ணுக்கு உரிய பாணியில் மிகவும் மென்மையாக பேசி, அவர்களிடம் மிகவும் நெருக்கமான நட்புறவை முதலில் ஏற்படுத்தி இருக்கிறார். 

இதனால், முகம் தெரியாத இன்ஸ்டாகிராமில் பழகி வந்த சுமந்த்தை, பெண் என்று நம்பிய இளம் பெண்கள் பலரும், தங்களின் புகைப்படங்களை அவருக்கு அனுப்பி வைத்து, பல ரகசியங்களையும் கூறியதாகத் தெரிகிறது.

குறிப்பாக, இளம் பெண்களின் புகைப்படங்களைச் சேகரிக்கும் வரை, மிகவும் மென்மையாகப் பேசிவந்த சுமந்த், இளம் பெண்களின் புகைப்படங்கள் கிடைத்த பிறகு, தனது ஒட்டு மொத்த சுய ரூபத்தையும் காட்டத் தொடங்கி இருக்கிறார். 

முக்கியமாக, பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்தரித்து, அவற்றை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்பி அவர்களை மன ரீதியாக துன்புறுத்தியும் 
அல்லது அழுத்தம் கொடுக்கும் வேலைகளையும் அவர் செய்யத் தொடங்கி இருக்கிறார். 

இளைஞர் சுமந்த்தின் இப்படியான தொடர்ச்சியான தொந்தரவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், கடும் மன உளைச்சலுக்கு ஆளாக அங்குள்ள காவல் 

நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அதன் பேரில், ஐதராபாத் சைபர் க்ரைம் காவல் துறையினர், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சுமந்த் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு தெரிய வந்தது. 

அதாவது, “விஜயவாடாவைச் சேர்ந்த சுமந்த், புகார் அளித்த பெண் உள்பட கிட்டத்தட்ட 70 இளம் பெண்களிடம் போலிக் கணக்குகளில் பேசியே ஏமாற்றி இருக்கிறார். 

“பெண்கள் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிக் கணக்குகளை உருவாக்கும் சுமந்த், இணையத்திலிருந்து அழகான பெண்களின் புகைப்படங்களைத் தர விறக்கம் செய்து, தன்னுடைய சுய விவரப்படமாக அதனை வைத்திருக்கிறர்.

இதன் பிறகு, இளம் பெண்களைக் குறி வைத்து நட்புக்கான கோரிக்கை அனுப்பி, அவர்களும் பதிலுக்கு இவரைப் பின் தொடர்ந்தால் அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளச் செய்திருக்கிறார். 

அதன் பிறகு, அவர்களிடம் அன்பாகப் பேசி அவர்களுடன் நெருக்கமாகி, புகைப்படங்களை வாங்கி விடுகிறார். இதன் பிறகுதான், அந்த புகைப்படங்களை மார்பிங் செய்து, அந்தப் பெண்களுக்கு அனுப்பி மிரட்டி தொந்தரவு செய்திருக்கிறார்” என்று, சைபர் க்ரைம் பிரிவு துணை காவல் ஆணையர் பிரசாத் கூறி உள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.