திருமணத்திற்குப் பிறகும், “ஆண்களிடம் மட்டுமே ஆர்வம் இருப்பதாக” கூறி, திருமணமான ஒரு வருடத்தில் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்த கணவனால் செயல்பாடுகளால், அவரது மனைவி கடும் அதிர்ச்சி அடைந்தார். 

குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த 35 வயதான சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதான அமுதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவருக்கும் இடையே, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் ஏற்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாகக் காதலர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு முன்பு இருந்தே அவரது மனைவி, அந்த பகுதியில் உள்ள ஒரு நூலகத்தில் பணி புரிந்து வந்தார். அதே போல், சரவணனும், அந்த பகுதியில் செயல்படும் மற்றொரு நூலகத்தில் பணி புரிந்து வந்தார். அப்போது தான், இவர்கள் இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது, அந்த காதல் திருமணத்தில் முடிந்து உள்ளது.

திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இடையே ஒரு ஆண்டு காலம் மிகுந்த சந்தோசமாகச் சென்றுள்ளது. இதனையடுத்து, கணவன் சரவணனின் செல்யபடுகளில் திடீரென்று மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளது. இதனால், சந்தேகப்பட்ட அவர் மனைவி அமுதா, கணவனின் சரவணனின் செயல்பாடுகளை கவனிக்க ஆரம்பித்து உள்ளார்.

அப்போது, அவருக்குச் சந்தேகம் அதிகமானால், திடீரென்று கணவரின் செல்போனை பரிசோதித்துப் பார்த்துள்ளார். அப்போது, கணவனை செல்போனை வாங்கி பார்த்ததில், அவர் மனைவிக்கு கடும் அதிர்ச்சி அடைந்தார். அந்த செல்போனில், சரவணன் பல ஆண்களுடன் தன் பாலின உறவில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி, இது குறித்து தன் கணவனிடம் விசாரித்து உள்ளார். அப்போது, கணவன் சொன்ன பதிலால் 
மேலும் அவர் மனைவி அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

அதாவது, “திருமணத்திற்கு முன்பு இருந்தே எனக்கு ஆண்களிடம் மட்டுமே ஆர்வம் இருந்து வந்தது. சமுதாயம் ஏற்றுக் கொள்ள வேண்டி மட்டுமே நான் உன்னைக் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். மற்றபடி ஒன்றுமில்லை. திருமணத்திற்குப் பிறகு இது மாறும் என்று நினைத்தேன். ஆனால், என்னால் அப்படி இருக்க முடியவில்லை” என்று கூறி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அமுதா, கணவனிடம் சண்டைக்குச் சென்றுள்ளார்.

அப்போது, “இந்த விசயம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால், மனைவி என்று பார்க்காமல் உன்னைக் கொலை செய்து விடுவேன்” என்றும், சரவணன் தன் மனைவியை மிரட்டி உள்ளான். இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி அமுதா, கணவனின் மனதை மாற்ற எவ்வளவோ முயன்று உள்ளார். ஆனால், முடியாமல் தான் கொண்ட முடிவில் சரவணன் உறுதியாக இருந்து உள்ளான்.

அத்துடன், நூலகத்தில் பணிபுரிந்து வந்த சரவணன், அங்குள்ள சில ஆண்களுடன் தவறான உறவில் ஈடுபட்டு வந்ததால், அவரது வேலையும் பறிபோய் உள்ளது. இதனால், வேலையிழந்த கணவன் சரணவன், அதன் பின் தனது ஆண் நண்பர்களை மனைவி இருக்கும் போதே வீட்டிற்கு அழைத்து தவறான செயலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், அப்போதும் கணவரது மன நிலையையும், அவரது குணத்தை மாற்ற மனைவி பல வழிகளை செய்தும் எதுவும் பலன் அளிக்க வில்லை.

இதனையடுத்து, கணவரின் பெற்றோரிடம் இது குறித்து அமுதா புகார் அளித்து உள்ளார். ஆனால், கணவரின் குடும்பத்தினரிடம் இதனைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மனைவி, தன்னுடைய கணவர் குறித்து இந்த குற்றச்சாட்டுத் தொடர்பாக, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இதனிடையே, கணவனின் தன் பாலின உறவு குறித்து அவரது மனைவியே அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.