கள்ளக் காதலனுடன் ஓடிப்போன மனைவியைத் தேடி கண்டுபிடித்த கணவன், அவரின் ஆடைகளை உருவி நிர்வாணப்படுத்தி ஊரார் முன்னிலையில் காதலன் தோளில் சுமக்க வைத்து, ஊர்வலமாகக் கூட்டிச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

குஜராத் மாநிலம் தகோத் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

குஜராத் மாநிலம் தகோத் மாவட்டத்தின் தன்பூர் தாலுகாவில் உள்ளது கஜூரி எனும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், கடந்த ஆண்டு திருமணம் ஆன நிலையில், தனது கணவருடன் வசித்து வந்தார்.

அப்போது, அந்த பெண்ணுக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இதனையடுத்து, திருமணம் ஆன அந்த பெண், தனது கள்ளக் காதலனுடன் ஓடிப்போய், குடும்பம் நடத்தி வந்தார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர், அந்த பெண்ணை பக்கத்துக் கிராமம் முழுவதும் தேடி எப்படியோ கண்டுபிடித்து, அந்த பெண்ணையும், அந்த கள்ளக் காதலனையும் கடந்த ஜூலை 6 ஆம் சொந்த கிராமத்திற்கு அழைத்து வந்து உள்ளனர்.

அந்த கிராமத்தில் வைத்து, அந்த கணவரும், அவரது குடும்பத்தினரும் வீட்டை விட்டு கள்ளக் காதலனுடன் ஓடிப்போன அந்த பெண்ணை தண்டிக்கும் விதமாக, அவரின் ஆடைகளை உருவி, நிர்வாணப்படுத்தி அந்த கள்ளக் காதலன் தோளில் சுமக்க வைத்து, ஊர் மக்கள் முன்னிலையில் ஊர்வலம் அழைத்துச் சென்று உள்ளனர். 

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் பார்க்கும் போது, “23 வயதான அந்த பெண்ணின் ஆடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்துகின்றனர். இந்த சம்பத்தில், அந்த பெண்ணின் கணவரும், அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களே அதிக அளவில் இருக்கின்றனர்.

அப்போது, அருகில் நின்றிருந்த ஒரு சில பெண்கள், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிற்கு மாற்றுத் துணி கொடுத்து உள்ளனர். ஆனாலும், அவற்றைக் கணவனின் குடும்பத்தினர் தூக்கி எறிந்துள்ளனர். 

அதன் பிறகே, அந்த ஊரில் உள்ள குழந்தைகள், பெண்கள் உட்பட ஒட்டுமொத்த ஊர் மக்கள் முன்னிலையில், அந்த கள்ளக் காதலன் தோளில் அந்த பெண்ணை அமர வைத்த, ஊர்வலமாகக் கூட்டிச் சென்றிருக்கிறார்கள். 

இந்த ஊர்வலத்தின் போது, அந்த பெண்ணை அடித்தும், மிக கடுமையாக அந்த பெண்ணையும், அந்த கள்ளக் காதலனையும் அவர்கள் கடும் சித்திரவதை செய்து உள்ளனர்.

இந்த வீடியோ, அந்த மாநிலம் முழுவதும் பெரும் வெளியாகி வரலானதைத் தொடர்ந்து, அந்த பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்குப் பிறகு, அந்த பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் கணவனின் உறவினர்கள் என ஒட்டுமொத்தமாக 18 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.