63 வயதில் முதல் திருமணம் செய்த நபர், தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்ததும் மணமகள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலத்தின் பீப்பல்சட் என்னும் கிராமத்தைச் சேர்ந்த 63 வயதான கல்யாண்பாய் என்பவர், விதவை சகோதரி மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர் ஆகியோருடன் தனியாக வசித்து வந்தார். 

63 வயதான கல்யாண்பாய்க்கு, பல ஆண்டுகளாகப் பெண் தேடியும் எந்த வரனும் கிடைக்கவில்லை. அத்துடன், மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரர் மற்றும் தனது 
விதவை சகோதரி ஆகியோர் கவனித்துக் கொள்ளவும் அவருக்கு ஒரு துணை தேவைப்பட்டது.

இது போன்ற காரணங்களால், கல்யாண்பாயின் திருமணம் அவருடைய இந்த 63 வயது வரை தள்ளிக்கொண்டே போனது.

அதே நேரத்தில், தனக்கு 63 வயது தற்போது ஆனாலும், தான் திருமணம் செய்து கொள்வதில் மட்டும் அவர் உறுதியாக இருந்து வந்து உள்ளார். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், 63 வயதான கல்யாண் பாயைத் திருமணம் செய்துகொள்ள அந்த பகுதியின் அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த 40 வயதான 
லைலாபென் ரபரி என்ற பெண் சம்மதம் தெரிவித்தார்.

இதனால், 63 வயதில் திருமணம் நடக்கப் போவதை நினைத்து, கல்யாண் பாய் மற்றும் அவரது உறவினர்கள் சந்தோசப்பட்டனர்.

திட்டமிட்டபடி, 63 வயதான கல்யாண் பாய் - 40 வயதான லைலாபென் ரபரி ஆகியோரின் திருமணமானது, அந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில், நேற்றைத் தினம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது. 

திருமணம் முடிந்த நிலையில், புதுமணத் தம்பதிகள் இருவரம், மாப்பிள்ளையின் வீட்டிற்கு நுழைந்து உள்ளனர். அப்போது, யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில், திடீரென அந்த மணப்பெண்ணான லைலாபென் ரபரி அங்கேயே சுருண்டு தரையில் விழுந்தார்.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத மாப்பிள்ளை கோலத்தில் நின்ற கல்யாண் பாய் மற்றும் உறவினர்கள், பதறிய துடித்து அந்த பெண்ணை மீட்டு உடனடியாக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர், இந்த பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

இதனை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை கல்யாண் பாய், அங்கேயே கதறி அழுதது அனைவரையும் கண் கலங்கச் செய்தது.

மேலும், திருமணம் செய்து கொண்ட ஈரம் காய்வதற்குள் வீட்டிற்குள் நுழைந்த வேகத்தில் மனைவி உயிரிழந்ததைத் தொடர்ந்து, கல்யாண் பாய் தனது மனைவியின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து, உடலைத் தகனம் செய்தார்.

தன்னுடைய 63 வயது வரை திருமணம் தள்ளிக் கொண்டே போன நிலையில், ஒரு வழியாகத் தனது 63 வயதில் கல்யாண் பாய்க்குத் திருமணம் நடந்த நிலையில், திருமணம் நடந்த அன்றே அவரின் மனைவி உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே கடும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.