உத்தரப் பிரதேச மாநிலத்தில் தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி, மயங்கும் வரை 2 இளைஞர்களால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் தான், இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த சுமார் 15 வயது மதிக்கத் தக்க சிறுமி ஒருவர், அந்த பகுதியில் உள்ள குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காகச் சென்று உள்ளார்.

அப்போது, அங்குள்ள டெரிபார் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் மற்றும் அவரது நண்பன் ஒருவரும் சிறுமியை பார்த்து பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சிறுமி, குளத்தின் அருகில் வந்ததும், அந்த இரு இளைஞர்களும், சிறுமியை அங்கிருந்து மறைவான இடத்திற்குப் பலவந்தமாகத் தூக்கிச் சென்று, அடித்துத் துன்புறுத்தி அந்த சிறுமியை இருவரும் கூட்டாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இந்த இரு இளைஞர்கள் வெறிபிடித்தார் போல், மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்ததால், ஒரு கட்டத்தில், அந்த சிறுமி அங்கேயே மயங்கி உள்ளார். இதனால், பயந்துபோன இருவரும், சிறுமியை அங்கேயே விட்டு விட்டு, அப்படியே தப்பி ஓடி உள்ளனர்.

இதனையடுத்து, தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்ப வில்லை என்று, சிறுமியை தேடி அவரது பெற்றோர் குளம் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். ஆனால், அந்த குளத்தின் அருகே குடம் மட்டும் கிடந்துள்ளது. சிறுமியை காணவில்லை. இதனால், பயந்த சிறுமியின் பெற்றோர், அந்த குளத்தைச் சுற்றி உள்ள ஒட்டு மொத்த மறைவிடத்திலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த பகுதியில் இருந்த ஒரு மறைவான இடத்தில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சுத்தமாக நினைவின்றி மயங்கிய நிலையில் அங்கே கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்து, கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்கேயே கதறி அழுதனர். மேலும், சிறுமியை தேடிச் சென்ற அவரது உறவினர்கள், அந்த சிறுமிக்கு உயிர் இருக்கிறதா? என்று பார்த்துள்ளனர். அப்போது, சிறுமிக்கு உயிர் இருப்பது தெரிய வந்த நிலையில், உடனடியாக சிறுமியை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமிக்கு நினைவு திரும்பியது. இதனையடுத்து, சிறுமியிடம் போலீசார் வாக்கு மூலம் பெற்றனர். அதன் அடிப்படையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த டெரிபார் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் மற்றும் அவரது நண்பனை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். 

இதில், டெரிபார் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அர்ஜூன், அவரது நண்பர் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொருவனைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

இதனிடையே, தண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமியை 2 இளைஞர்கள் சேர்ந்து, மயங்கும் வரை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.