தெலுங்கானாவில் உள்ள அனாதை ஆசிரமத்தில் சிறுமி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அமீன்பூர் என்னும் பகுதியில் 'மாருதி அனாதை ஆசிரமம்' செயல்பட்டு வருகிறது.

தனி நபரால் நடத்தப்படும் இந்த 'மாருதி அனாதை ஆசிரமத்தில்' ஏராளமான ஆதரவற்றோர் சிறுவர், சிறுமிகள் தங்கி உள்ளனர். அவர்களை அந்த நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர். இந்த 'மாருதி அனாதை ஆசிரமத்தை' விஜயா என்ற பெண் நிர்வகித்து வருகிறார்.

இதனிடையே, அந்த 'மாருதி அனாதை ஆசிரமத்திற்கு' வேணுகோபால் என்பவர், அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, அந்த ஆசிரமத்தில் உள்ள 14 வயது சிறுமி மீது அவருக்கு காம உணர்வு ஏற்பட்டுள்ளது. அந்த சிறுமிக்கு வெறும் 14 வயது தான் ஆகிறது என்பது தெரிந்தும், அந்த சிறுமியை எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று, வேணுகோபால் துடித்துள்ளார். இதனால், விஜயாவக்கு அவர் நிறைய பணம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால், ஆசிரமத்தின் பெண் நிர்வாகி விஜயா மற்றும், அந்த ஆசிரமத்தில் வேலை பார்த்து வரும் மற்றொருவரின் உதவியுடன், அந்த 14 வயது சிறுமியை கடந்த பல மாதங்களாகவே வேணுகோபால் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

அதாவது, அந்த 14 வயது சிறுமிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உள்ளனர். இதனால், சிறுமி மயங்கி விடவே, அந்த 14 வயது சிறுமியை வேணுகோபால் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இந்த சம்பவம் குறித்து, சிறுமிக்கு தெரியவந்த நிலையில், சிறுமியை அவர்கள் கடுமையாக மிரட்டியதாகவும் தெரிகிறது.

இப்படி பல மாதங்களாக அந்த சிறுமிக்கு பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வந்ததால், அந்த சிறுமியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால், பயந்துபோன அந்த ஆசிரமத்தின் நிர்வாகம், சிறுமியின் உறவினரை வரவைத்து, அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்துள்ளனர்.

சிறுமி உறவினர் வீடு திரும்பிய நிலையில், அவரின் உடல் நிலை மிகவும் மோசமடைந்த நிலையில், அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளனர். அப்போது, மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ள நிலையில், இந்த பாலியல் பலாத்கார சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் சிறுமியின் உறவினரிடமும், அங்குள்ள போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தனர். அத்துடன், இது தொடர்பாக ஆசிரமத்தின் நிர்வாகி விஜயா, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வேணுகோபால் உட்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், பாலியல் பலாத்கார வழக்காக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிறுமி உயிரிழந்துள்ளதால், இதனைக் கொலை மற்றும் பாலியல் பலாத்கார வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர். அதன்படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.