“பாஜக வின் பி டீமான ஆம் ஆத்மி, எங்கு போட்டியிட்டாலும் பாஜகவை பதவியில் அமர வைப்பது தான், அந்த கட்சியின் இலக்கு” என்று, காங்கிரஸ் கட்சி மிக கடுமையான விமர்சனத்தை முன்வைத்து உள்ளது.

“அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா” என்ற சொல்லாடல் வரிசையில், “குறிப்பிட்ட அரசியல் கட்சியின் பி டீம்” என்கிற வார்த்தையும், இந்திய அரசிலுக்கு புதிதான ஒரு சொல்லாடல் தான். 

அதாவது, ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு விதமான கொள்கைகள் மற்றும் இலட்சிம் இருக்கும். ஆனால், தனது கட்சி சார்ந்த கொள்ளை மற்றும் இலட்சிம் நோக்கி செயல்படாமல், மற்றொரு கட்சியின் நன்மை சார்ந்து பேசுவதும், செயல்படுவதுமே பி டீம் என்று விமர்சிக்கப்படுகிறது.

அந்த வகையில், “தமிழ்நாட்டில் பாஜகவை வளர்க்க, நாம் தமிழ் கட்சியின் ஒருகிணைப்பாளர் சீமான், செயல்படுவதாகவும், அதனால் சீமான் பாஜக வின் பி டீம்” என்றே, தமிழக அரசியலில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தலைநகர் டெல்லியிலும் “பாஜக வின் பி டீம் என்றே, ஆம் ஆத்மி கட்சியை தற்போது சில கட்சிகள் விமர்சனம் செய்யத் தொடங்கி உள்ளனர்.

அந்த வகையில், பாஜக வின் பி டீமான ஆம் ஆத்மி, எங்கு போட்டியிட்டாலும் பாஜகவை பதவியில் அமர வைப்பது தான், அந்த கட்சியின் இலக்கு” என்று, காங்கிரஸ் கட்சி மிக கடுமையாகவும், வெளிப்படையாகவும் தற்போது குற்றம்சாட்டி உள்ளது.

அந்த வகையில், சமீபத்தில் நடந்த சண்டிகர் மாநகராட்சி தேர்தலில், அங்கு போட்டியிட்ட எந்த ஒரு கட்சிக்கம் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கடந்த வாரம் ஞாயிற்றுக் கிழமையன்று சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி கவுன்சிலர் ஹர்பிரீத் கவுர் பாப்லா, திடீரென்று பாஜகவில் இணைந்தார். 

இந்த நிகழ்வானது, பாஜகவுக்கு சாதமாக அமைந்து போனது.

இந்த நிலையில் தான், நேற்றைய தினம் சண்டிகர் மாநகராட்சி மேயருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் பாஜக சார்பில் சரப்ஜித் கவுர், ஆம் ஆத்மி சார்பில் அஞ்சு கத்யால் மேயர் பதவிக்கு போட்டியிட்டனர். 

இந்த மேயர் தேர்தலில் மொத்தம் 28 ஒட்டுக்கள் பதிவானது. 

இனனையடுத்து, இதில் பதிவான மொத்த வாக்குகளும் எண்ணப்பட்டன. அப்போது, பாஜக வுக்கு 14 வாக்குகளும், ஆம் ஆத்மிக்கு 13 வாக்குகளும், ஒரு வாக்கு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து, சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட சரப்ஜித் கவுர், புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் டிஜிட்டல் ஊடகங்களின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கவுரவ் பாண்டி தனது டிவிட்டரில் ஒரு ஆவேசமான பதிவை பகிர்ந்து உள்ளார்.

அதில், “ஆம் ஆத்மி கட்சியின் ஒரு வாக்கு ரத்து செய்யப்பட்டு, பாஜக வுக்கு மேயர் பதவி உறுதி செய்யப்பட்டு உள்ளது” என்று, குறிப்பிட்டு உள்ளார். 

அத்துடன், “பாஜக வின் பி டீம் அதன் இலக்கை அடைந்து விட்டது. ஆம் ஆத்மி கட்சி எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும், இதைத் தான் சாதிக்க வேண்டும்” என்று பதிவு செய்து உள்ளார். 

இந்த டிவிட்ட பதிவு, தேசிய அளவில் வைரலாகி வருகிறது. இதனால், ஆம் ஆத்மி கட்சியை பாஜக வின் பி டீம் என்றே இணையத்தில் பலரும் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.