தந்தையின் 2 வது மனைவியுடன் மகன் அடிக்கடி உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததால், அவர் கர்ப்பம் அடைந்த நிலையில், அதனை மறைக்க சித்தியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் உள்ள குருகிராம் பகுதியில் மன்விந்தர் சிங் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இவருக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். இதில், மன்விந்தர் சிங்கின் முதல் மனைவி இறந்த நிலையில், மூத்த மகன் தேவேந்திர சிங் டெல்லியில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். இதனால், அவரின் 2 வது மகன் தான் தந்தையுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் தான், மன்விந்தர் சிங், ரேச்சரல் என்ற பெண்ணை 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.

2 வது மனைவியான ரேச்சல், அந்த பகுதியில் செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலையில் பணி புரிந்து வந்தார். 

அத்துடன், மன்விந்தர் சிங்கும் வேலைக்கு சென்று வந்த நிலையில், மன்வீந்தர் சிங்கின் 2 வது மகன் தன்வீந்தர், தனது சித்தி ரேச்சலை தினமும் தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு அழைத்துச் சென்று வந்தார். 

அப்போது, சித்தி ரேச்சலுக்கும் இளம் வயது என்பதால், கணவரின் 2 வது மகன் தன்வீந்தருக்கும் இடையே இனம் புரியாத காதல் ஏற்பட்டு உள்ளது. 

இதனையடுத்து, அவர்களுக்குள் இது கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவத்து வந்தனர். 
இந்த சூழலில் தான், அந்த பெண் திடீரென்று கர்ப்பமானார். இதனால், பயந்துபோன அந்த பெண், இந்த விசயத்தை, தனது கணவனின் 2 வது மகனிடம் கூறியிருக்கிறார்.

இதனைக் கேட்டு சற்று அதிர்ச்சியடைந்த அவர், “இந்த விஷயம் எனது தந்தைக்கு தெரிந்தால், பெரும் பிரச்சனையாக மாறிவிடும்” என்று, பயந்து, சித்தியை கொலை செய்ய முடிவு செய்தார்.

இது தொடர்பாக திட்டமிட்ட தன்வீந்தர், அந்தப் பெண்ணை விருந்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டு, அழைத்துச் சென்றிருக்கிறார்.

அப்போது, போகும் வழியில் தனது சித்திக்கு குடிக்க மாது வாங்கி கொடுத்துவிட்டு அழைத்துச் சென்ற அவர், அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தனது சித்தி ரேச்சலை கழுத்தை நெரித்து மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார்.

இதனால், ரேச்சல் மூச்சு முட்டி அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடலை அங்குள்ள குளத்தில் வீசி விட்டு, ஒன்றும் தெரியாதது போல், வீட்டிற்குச் சென்று உள்ளார்.

பின்னர், வீட்டிற்கு சென்று தனது தந்தையுடன் சித்தியை தேடுவது போல் தேடிய அவர், அங்குள்ள காவல் நிலையத்தில் சித்தியை காணவில்லை என்று புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது, போலீசாரின் விசாரணைக்குப் பயந்து திடீரென தன்வீந்தர் தலைமறைவானார். இதனால், சந்தேகம் அடைந்த போலீசார் தன்வீந்தர் பக்கம் விசாரணை திருப்பிய நிலையில், அவரை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் தான் செய்து கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.