பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, அவரை தொடர்ந்து மிரட்டி வந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அந்த மாநிலத்தின் பெண் போலீசாருக்கு நிகழ்ந்திருக்கிறது.

“சமூக வலைத்தளங்களில் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்களில் அறிமுகம் ஆகும் புதிய மனிதர்களிடம் பெண்கள் யாரும் தனிப்பட்ட விவரங்களைத் தெரிவிக்க வேண்டாம்” என்றும், இந்தியா முழுவதும் அந்தந்த மாநில போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை கொடுத்து வருவது வாடிக்கையான நடந்துகொண்டிருந்தது.

ஆனால், தற்போது அப்படி பொது மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்த பெண் போலீஸ் ஒருவரே, சமூக வலைத்தளங்களில் மூலம் அறிமுகமானவரை நம்பிச் சென்று, கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது, அவுரங்காபாத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர், சமூக வலைத்தளங்கள் மூலமாக மும்பையைச் சேர்ந்த பெண் காவல் ஆய்வாளருடன் அறிமுகம் ஆகி உள்ளார். இதனையடுத்து, அந்த பெண் ஆய்வாளர் அந்த இளைஞனை முழுமையாக நம்பி உள்ளார். இதனையடுத்து, அந்த இளைஞனும், இந்த பெண் காவல் ஆய்வாளரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்து உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, இருவரும் தங்களது செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட நிலையில், இருவரும் மிகத் தீவிரமாக தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இப்படியான நிலையில் தான், அந்த காதலன் மும்பையில் உள்ள போவாய் பகுதிக்கு வந்து, பெண் காவல் ஆய்வாளரை நேரில் சந்தித்து “உங்களை நான் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று, வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.

இதையடுத்து, அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து உள்ளனர். அப்போது, அந்த பெண் ஆய்வாளருக்கேத் தெரியாமல், அந்த காதலன் அந்த உல்லாச காட்சிகளை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வைத்து, அந்த பெண் காவல் ஆய்வாளரை மிரட்டத் தொடங்கி இருக்கிறான்.

இதனால், மானத்திற்குப் பயந்து போன அந்த பெண் காவல் ஆய்வாளர், அந்த நபர் சொல்லும் படியெல்லாம் செய்திருக்கிறார். அப்போது, அந்த இளைஞனின் இரு நண்பர்களுடன் சேர்ந்து 3 பேருமாக இந்த பெண் காவல் ஆய்வாளரைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

ஆனால், அவர்களின் மிரட்டல்கள் நாளுக்கு நாள் எல்லை மீறிப்போகவே, பாதிக்கப்பட்ட அந்த பெண் காவல் ஆய்வாளர், அங்குள்ள மேக்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்..

அதன் படி, கடந்த  சில நாட்களுக்கு முன்பு, மேக்வாடி காவல் நிலைய போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கி உள்ளனர். தற்போது குற்றவாளிகள் 3 பேரும் தலைமறைவாகி உள்ளனர்.

பின்னர் இந்த வழக்கு, ஜீரோ எஃப்ஐஆரின் கீழ் அங்குள்ள பூவாய் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனாலும், இந்த வழக்கில் இது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், கூறப்படுகிறது. இச்சம்பவம், மகாராஷ்டிரா மாநில காவல் துறையினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.