உயர் கல்வியில் இறுதிப் பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப் பாடங்களின் தேர்வுக்கான கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து, மாணவர்கள் தரப்பிலிருந்து அவருக்கு தொடர்ச்சியாக பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டு வந்தது.

ஈரோடு கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலம் அருகில், முதல்வருக்கு அரியர் மாணவர்கள் சார்பில் வாழ்த்து பேனர்கள்கூட வைக்கப்பட்ன. அந்த வாழ்த்து பேனரில் "அரியர் மாணவர்களின் அரசனே... எந்நன்றி கொன்றார்க்கு  உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு...  என்ற திருக்குறளை எழுதி, ஐயா எடப்பாடியாரே... நீர் வாழ்க வாழ்க... இப்படிக்கு அரியர் மாணவர்கள் என எழுதப்பட்டிருந்தது. இந்த வாழ்த்து பேனரை அப்பகுதியில் சென்றவர்கள் வியப்புடன் பார்த்துச் சென்றனர். சமூக வலைதளத்தில் அந்த பேனர் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. நிறைய மீம்ஸூம், முதல்வரை வாழ்த்தி வரத்தொடங்கின.

இப்படியான சூழலில்தான், இறுதி செமஸ்டர் தேர்வும் ரத்தாகுமா என்ற எதிர்ப்பார்ப்பும் மாணவர்களிடையே வலுக்கத்தொடங்கியது. பாடம் நடத்தாமல் இறுதியாண்டு மாணவர்கள் மட்டும் எப்படி தேர்வு எழுத முடியும் என கேள்விகள் எழுந்த நிலையில், 8 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்து இருந்தனர்.

கொரோனா அச்சுறுத்தலால் கல்லூரிகளில் பாடங்கள் நடத்தாததால் செமெஸ்டர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, இறுதியாண்டு செமெஸ்டர் தேர்வை ரத்து செய்ய யுஜிசி மறுப்பு தெரிவித்து விட்டது. இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேர்வு நடத்த தடை விதிக்க முடியாது என உத்தரவிட்ட நீதிபதிகள் மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் தேர்வு நடத்தாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க கூடாது. இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்தாமல் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அரசு பட்டம் வழங்க கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் யுஜிசி வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாக தேர்வா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது

இதுதொடர்பாக, யுஜிசி வழிகாட்டுதலின் படி தமிழகத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. தேர்வு அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாக தேர்வா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. கொரோனா காரணமாக கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை தள்ளி வைக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள அறிவிப்பில், கல்லூரி மாணவர்களுக்கான இறுதித் தேர்வை ரத்து செய்ய முடியாது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாணவர்கள் சார்பில் தொடரப்பட்ட தேர்வு ரத்து செய்யும் வழக்கை உச்சநீதிமன்றம் தொடர்ந்து ரத்து செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.