“கள்ளக் காதலனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட மனைவியான பெண் கவுன்சிலர் ஒருவர், தனது கணவனை போதைப் பொருள் வழக்கில் அதிரடியாக சிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டன் மேடு பகுதியைச் சேர்ந்த 38 வயதான சுனில் வர்கீஸ் என்பவர், தனது 33 வயதான மனைவி சவுமியா உடன் வசித்து வந்தார்.

அதே நேரத்தில், சுனில் வர்கீஸின் மனைவி சவுமியா, அங்குள்ள வண்டன்மேடு பஞ்சாயத்து கவுன்சிலராக இருக்கிறார். 

இந்த சூழலில் தான், அதே பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் 43 வயதான வினோத் என்பவருடன், பெண் கவுன்சிலர் சவும்யாவுக்கு அதிகம் நெருக்கம் ஏற்பட்டு உள்ளது. 

இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்தது. இதன் காரணமாக, வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த வினோத், துபாயிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து சவுமியாவை அதிகம் சந்தித்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் கள்ளக் காதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், கள்ளக் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து உள்ளனர். இந்த திருமணத்திறகு கணவன் சுனில் வர்கீஸ் தடையாக இருப்பார் என்று யோசித்த அவரது மனைவியான பெண் கவுன்சிலர் சவும்யா, தனது கணவனை கொலை செய்ய முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

ஆனால், எப்படியும் நாம் போலீசில் சிக்கிக்கொள்வோம் என்று யோசித்த அவர், இதற்கு பயந்து கொலை திட்டத்தை மாற்றி தனது கணவனை போதைப் பொருள் வழக்கில் சிக்க வைக்க அவர் திட்டம் தீட்டி உள்ளார்.

இதனையடுத்து, வினோத் தன்னுடைய நண்பரான 39 வயதான ஷாநவாஸ் என்ற நபவரை தொடர்பு கொண்டு, இந்த திட்டம் பற்றி கூறியிருக்கிறார்.

ஆனால், அவர் கொச்சியில் உள்ள ஒரு போதைப் பொருள் கும்பலிடம் 45 ஆயிரம் மதிப்பிலான எம்.டி. எம். ஏ என்ற ஒரு போதைப் பொருளை வாங்கி, அதனை வினோதிடம் கொடுத்து உள்ளார். 

இதனைப் பெற்றுக்கொண்ட வினோத், இதை கொல்லத்தை சேர்ந்த 24 வயதான ஷெபின்ஷா என்பவர் மூலம், சவுமியாவுக்கு கொடுத்து அனுப்பி இருக்கிறார்.

இதனைப் பெற்றுக்கொண்ட சவுமியா, அந்த போதைப் பொருளை தனது கணவனின் பைக்கில் மறைத்து வைத்து விட்டு வினோத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார். 

அதன் தொடர்ச்சியாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு வினோத் தன்னுடைய நண்பர் மூலமாக, “சுனில் என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் போதைப் பொருள் கடத்துவதாக” இடுக்கி மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கொடுத்து உள்ளார். 

இது குறித்து, உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்ட வண்டன் மேடு போலீசுக்கு அவர் அதிரடியாக உத்தரவிட்டார்.

அதன்படி, வண்டன் மேடு போலீசார் சுனிலின் பைக்கை சோதனையிட்ட போது, அதிலா் போதைப் பொருள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டு, அது பறிமுதல் செய்யப்பட்டது. 

இதனையடுத்து, அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆனால், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுனில் நிரபராதி என்பதை போலீசார் கண்டுப்பிடித்தனர். 

இதனால், போலீசார் அவரை விடுவித்த நிலையில், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில், பெண் கவுன்சிலர் சவுமியா மற்றும் அவரது கள்ளக் காதலன் வினோத் ஆகியோர் சேர்ந்து நடத்திய சதி திட்டம் தான் இது” என்பது விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டது. 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார், சவுமியாவையும் அவருக்கு உடந்தையாக இருந்த ஷாநா வாஸ் என்பவரையும், கொல்லத்தை சேர்ந்த ஷெபின் ஷா என்பவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

குறிப்பாக, துபாயில் உள்ள வினோத்தை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தற்போது தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இதனிடையே, கள்ளக் காதலனை திருமணம் செய்வதற்காக கணவனை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பெண் கவுன்சிலர் ஒருவர் சிக்க வைத்து உள்ள சம்பவம் கேரளாவில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.