4 வருடங்களாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொடூர தந்தை பற்றி, பாதிக்கப்பட்ட மகள் தாயாரிம் கூறிய நிலையில், ஊரே திரண்டு வந்து அந்த தந்தைக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா தாலுகாவுக்கு உட்பட்ட கோவிந்தா புரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான கோணப்பா, தனது மனைவி உடன் வசித்து வந்தார்.

இவருக்கு, 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். இந்த சிறுமி, அங்குள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.

இப்படியான சூழ்நிலையில் தான், தனது 15 வயது மகள் மீதே சபலப்பட்ட 45 வயதான கோணப்பா, ஒரு கட்டத்தில் தனது மனைவிக்குத் தெரியாமல் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

இப்படியாக, தனது மகளை 45 வயதான கோணப்பா, கிட்டதட்ட கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் தனது தந்தையின் பாலியல் அத்து மீறில் எல்லை மீறிப் போகவே, அதனால் ஏற்படும் உடல் வலிகளையும் பொறுத்துக்கொள்ள முடியாத அந்த 15 வயது சிறுமி, தந்தையின் பாலியல் அத்து மீறல்கள் குறித்து, தனது தாயாரிடம் கூறி கதறி அழுது உள்ளார்.

அதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த தாயார், இது குறித்து தனது கணவர் கோணப்பாவிடம் கேட்டு சண்டைக்கு சென்று உள்ளார்.

அப்போது, கோணப்பா “இந்த விஷயம் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால், உங்கள் 2 பேரையும் கொன்று விடுவேன்” என்று, மிக கடுமையாக மிரட்டி இருக்கிறார்.

இதனால், இன்னும் அதிர்ச்சி அடைந்த தாயும், மகளும் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, தற்கொலை செய்யவும் முடிவு செய்தனர்.

அதே நேரத்தில், தனது கணவனிடம் இருந்து மகளை காப்பாற்ற நினைத்த அவரது தாயார், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, மாப்பிள்ளை பார்த்து உள்ளார்.

தனது மனைவியின் திருமண ஏற்பாட்டு விசயங்களைத் தெரிந்துகொண்ட கோணப்பா, “மகளுக்கு திருமணம் ஆனாலும், அவளை நான் விட மாட்டேன்” என்று கூறி, மீண்டும் அவர்கள் இருவரையும் அச்சுறுத்தி உள்ளார்.

இதனால், இன்னும் பயந்து போன கோணப்பாவின் மனைவி, தனது குடும்பத்தினரிடம் இது குறித்து கூறி அழுது உள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவர்கள், அவர்கள் வசித்து வரும் கோவிந்தா புரம் கிராம மக்களின் உதவியுடன் கோணப்பாவை, அடித்து உதைத்து தர்ம அடி கொடுத்து, அங்குள்ள ஷிமோகா மகளிர் காவல் நிலையத்தில் அவரை ஒப்படைத்தனர். 

அங்கு, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார, இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கோணப்பாவை அதிரடியாக கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.