“மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும்” என்று, விவசாயிகள் அறிவித்து உள்ளனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டம் கடந்த 9 மாதங்களா தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 

கடந்த 9 மாதங்களாக உத்தரப் பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள், டெல்லி எல்லையை முற்றுகையிட்டு 250 நாட்களைக் கடந்து, 300 நாட்களை நோக்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அரசுடன் இது வரை பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், தோல்வியில் முடிந்தபோனதால், விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு துளியும் இறங்கி வரவில்லை என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் தான், சமீபத்தில் உத்தரப் பிரதேசத்தில் ஒன்று திரண்ட ஆலோசித்த விவசாயிகள், “எங்கள் உயிரே போனாலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் நடக்கும் போராட்டத்தை நாங்கள் கை விடமாட்டோம்” என்று, திட்டவட்டமாக கூறினார்கள்.

அத்துடன், “இன்னும் எத்தனை மாதங்கள் ஆனாலும் எங்கள் கோரிக்கை நிறைவேறாமல் போராட்டத்த களத்தை விட்டு நாங்கள் துளியும் நகர மாட்டோம்” என்றும், அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அத்துடன், “சுதந்திர போராட்டம் 90 ஆண்டுகள் தொடர்ந்தது என்றும், ஆகவே இந்த போராட்டம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று எனக்கு தெரியாது” என்றும், அவர்கள் பேசினார்கள்.

குறிப்பாக, “நாடு விற்கப்படுவதை நாம் தடுக்க வேண்டும்” என்று, வெளிப்படையாகவே விமர்சித்த விவசாயிகள், “3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி, வரும் 27 ஆம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்” என்று, விவசாய சங்கங்கள் ஒருமனதாக முடிவெடுத்து அறிவித்தன.

இந்த நிலையில், விவசாயிகளின் அடுத்த கட்ட போராட்டமான, வரும் 27 ஆம் தேதி நாடு முழுவதும் விவசாயிகள் நடத்த உள்ளதால், இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரம் ஆதரவு தெரிவித்து உள்ளார். 

தமிழகத்தைப் போலவே, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் “வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் வரும் 27 ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு” பல்வேறு மாநிலங்களில் உள்ள எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.