பிட்டன் தேவி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மெயின்பூரி நகரைச் சேர்ந்தவர். இவருக்கு 85 வயதாகிறது. இவர் தனது 12 பிக்ஹா நிலத்தை மோடிஜிக்கு அவர் செய்த அனைத்து நல்ல செயல்களுக்காகவும் கொடுக்க விரும்புவதாகக் கூறுகிறார்.


இதை செய்துக்கொண்டுக்குமாறு வழக்கறிஞர்களிடம் கேட்டுள்ளார். அதை கேட்ட அவர்கள் , முடிவை மாற்றிக்கொள்ளுமாறு கூறியும் பாட்டி தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.
பிட்டன் தேவியின் கணவர் மறைந்த பிறகு, அவர் தனது மகன்கள் மற்றும் மருமகள்களை சார்ந்து வாழ வேண்டிய சூழல். ஆனால் அவர்கள் பாட்டியை சரியாக கவனித்துக்கொள்ளாமல் , உடல் ரீதியாக அடித்து கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். இதனால் வேதனை அடைந்த பாட்டி தனது சொத்துகளை மோடிக்கு கொடுக்கிறார்.


இதைப்பற்றி பிட்டன் தேவி பாட்டி கூறுவது, ‘’ மகன்கள், மருமகள்கள் , ஏழு பேரன்கள், மூன்று பேத்திகள் இருந்தும் எல்லோரும் கைவிட்டனர். மோடியின் 2000 ரூபாய் ஓய்வு ஊதியம் தான் எனக்கு பெரிய அளவில் உதவுகிறது. மேலும் பிரதமரின் ஓய்வூதிய திட்டங்களில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதனால் எனது 12 பிஹா நிலத்தை மோடிக்கு கொடுக்கிறேன்” என்கிறார்.