ஆந்திர மாநிலம் கோதாவரியில் மர்ம நோய் காரணமாக  நோயால் 4 நாட்களில் 428 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருவர் பலியாகி இருக்கிறார். கிழக்கு கோதாவரியை அடுத்த ஏலூர் உள்ளிட்ட பத்து கிராமங்களில் கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் மயக்கமடைந்து வருகிறார்கள்

ஒரு சிலருக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லாத நிலையில், பலர் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனால் வீடு திரும்பினர்.  மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் வலிப்பு நோயுடன், நுரை நுரையாக வாந்தி எடுத்து வலியில் அலறுகிறார்கள்.


வாந்தி , குமட்டல், கண் எரிச்சல் வலிப்பு முதல் நினைவிழப்பு வரை இந்த மர்ம நோயின் பல அறிகுறிகள் என சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகளுக்கு இருப்பதால் ஆந்திராவில் அசாதரண சூழல் நிலவி வருகிறது.  இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின்  ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் , எந்த வித வைரஸ் தொற்றும் இல்லை என்றும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்றும் இல்லை என்று முடிவுகள் வந்திருக்கிறது.


பிறகு இது என்ன நோய் ? எதன் மூலமாக பரவுகிறது என்று ஆய்வு செய்ததில்  நீர் மாசுபாடு மற்றும் காற்று மாசுபாடும் கூட இந்த நோய்க்கு காரணமில்லை என்பதும் தெளிவாகி இருக்கிறது. 


ஏற்கெனவே கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் இன்னும் அடங்காத நிலையில்,  இந்த மர்ம நோய் மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது.  இந்த நோயை பற்றி ஆய்வு செய்ய  டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழுவும் அந்திரா விரைந்துள்ளது. அவர்கள் ஏலூர் பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.