“நிர்வாண படங்களுக்கு மாதம் 200 அமெரிக்க டாலர்கள் சம்பளம்” தருவதாகக் கூறிய இளைஞனின் பேச்சை நம்பி, பண ஆசையால் பல பெண்களும், தங்களது நிர்வாண படங்களை அனுப்பி வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 

டெல்லியில் உள்ள தில்ஷாத் கார்டன் பகுதியில் வசித்து வரும் 21 வயதான பரத்வாஜ், படித்து முடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

இப்போதும் சமூக வலைத்தளங்களில் மூழ்கியிருக்கும் பரத்வாஜ், பல்வேறு புதிய ஆப்களில் உள்ள நிறை குறவைகளைப் பற்றிய நிறை குறைகளை தெரிந்துகொண்டனர்.

அதன் படியே, ‘டாக் லைஃப்’ என்ற ஆப் மூலமாக, அதில் உள்ள பல விசயங்களைத் தெரிந்துகொண்ட பரத்வாஜ், ‘டாக் லைஃப்’ என்ற ஆப் மூலம் மன அழுத்தத்தில் இருக்கும் பல பெண்களை தொடர்பு கொண்டு பேசி வந்திருக்கிறார்.

இப்படியாக, உலகம் முழுவதும் பல இளம் பெண்களை அந்த ஆப் மூலமாக கண்டுபிடித்து அந்த பெண்களுக்கு கவுன்செலிங் கொடுப்பதாகக் கூறி அவர்களிடம் அறிமுகம் ஆகி உள்ளார்.

இதனையடுத்து, மன உளைச்சலில் இருக்கும் பெண்களுடன் தொடக்கத்தில் நட்பாகப் பேசி அவர்களுடன் பேசி பழகி வந்திருக்கிறார். அதன் பிறகு, பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்குப் பல விதங்களிலும் பண ஆசை காட்டியிருக்கிறார். இந்த பண ஆசையில் தனது வலையில் விழும் பல இளம் பெண்களையும், “நீங்கள் உங்களது நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்ப வேண்டும் என்றும், அப்படி எனக்கு அனுப்பி வைத்தால், உங்களுக்கு மாதம் 200 அமெரிக்க டாலர்கள் சம்பளம் தருவதாகவும்” ஆசை வலை விரித்திருக்கிறார். 

இந்த பண ஆசையில் விழுந்த பல பெண்களிடமிருந்தும் பரத்வாஜ், அவர்களது நிர்வாண படம் மற்றும் வீடியோக்களை வாங்கியிருக்கிறார்.

ஆனால், ஆபாச படங்களைப் பெற்றுக்கொண்ட பின், சம்மந்தப்பட்ட பெண்களுக்கு பணம் தராமல் ஏமாற்றி இருக்கிறார். 

இதனால், அந்த பெண்களால், எதுவும் செய்ய முடியாத நிலையில், அந்த படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பணம் சம்பாதித்து வந்திருக்கிறார் பரத்வாஜ். 

இப்படியாக, பரத்வாஜிடம் ஏமாந்த இந்தோனேசிய இளம் பெண் ஒருவர், பரத்வாஜ் மீது, காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகார், சைபர் க்ரைம் போலீசாருக்கும், க்ரைம் போலீசாருக்கும்  மாற்றப்பட்ட நிலையில், இது குறித்து வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை நடத்தி வந்னதர்.

இதனையடுத்து, பெண்களை ஏமாற்றி ஆபாசப் படங்களைப் பெற்று வந்த பரத்வாஜை அதிரடியாக கைது செய்தனர். பரத்வாஜின் இந்த குற்றச் செயல் குறித்து, அவரிடம் தந்தையிடம் போலீசார் விசாரித்த நிலையில், “என் மகன் ஒரு அறைக்குள் சென்று 6 ஆண்டுகளாக வெளியே வராமல் இருந்ததாகவும், அந்த அறைக்குச் சென்றது முதல் அவன் யாரிடமும் பேசாமல் இப்படி நடந்து கொண்டதாகவும்” கூறி, வேதனைப் பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட பரத்வாஜிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.