டெல்லியில் பெண்ணின் பெயரில் 4 போலி கணக்கு வைத்திருந்த ஆண் ஒருவர், வெப் சீரியஸ்ல நடிக்க வைப்பதாகக் கூறி, இளம் பெண்ணின் ஆபாசப் படத்தை அனுப்பச் சொல்லி தொந்தரவு செய்து, மிரட்டிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த கொரோனா காலத்தில், பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய - மாநில அரசுகள் தொடர்ந்து கூறி வருகிறது. குறிப்பாக, சைபர் கிரைம் குற்றங்கள் முன்பை விட தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது கொரோனா ஊரடங்கு காலத்தில் பலரும் வேலை இல்லாமல் தவித்து வருவதும், கடன், EMI, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் சிகிக்த் தவிப்பதுமே இது போன்று பல்வேறு குற்றங்களுக்கு அடிப்படை காரணமாக அமைந்து உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது, டெல்லியில் இது மாதிரியான ஒரு குற்றம் சம்பவம் தான் அரங்கேறி உள்ளது.

டெல்லியில் ராஷி கோயல் என்ற பெண்ணின் பெயரில், ஆண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஒரு போலியான கணக்கு வைத்திருந்தார். அந்த போலியான கணக்கிலிருந்து, தன்னை ஒரு பெண்ணாக காட்டிக்கொண்டு, சமூக வலைத்தளங்களில் இருக்கும் பல பெண்களுக்கு நடிப்பு ஆசையைத் தூண்டி விட்டு, அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறி வந்திருக்கிறார்.

அதன்படி, நடிக்க ஆசைப்படும் பெண்களிடம் “நீங்கள் அரை குறை ஆடையுடன் கிளமராக இருக்கும் உங்களது புகைப்படத்தை அனுப்புகள்” என்று கேட்டு வாங்கி வந்தார். எதிர் புறத்தில் வாய்ப்பு கேட்டுப் பேசும் பெண்களும், சக பெண் தானே கேட்கிறார் என்று நம்பி, தான் அரை குறை ஆடையுடன் இருக்கும் மிகவும் கிளமரான புகைப்படங்களை அனுப்பி வைத்து உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, அரை குறை ஆடையுடன் கிளமரான புகைப்படங்க்கை அனுப்பி வைக்கும் பெண்களிடம், “நீங்கள் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை அனுப்புங்கள். அப்ப தான் உங்கள் உடல் கட்டமைப்பைப் பார்த்து, அதற்குத் தகுந்த மாதிரியான கதாபாத்திரங்களைத் தர முடியும்” என்று, கேட்டு அடிக்கடி அந்த பெண் தொந்தரவு செய்துள்ளார். இதனால், எதிர் புறத்தில் இருப்பவர்களுக்குச் சந்தேகம் வந்து உள்ளது. தாம் ஏமாற்றப்படுகிறமோ என்று யோசிக்கும் சில பெண்கள், அந்த சமூக வலைத்தள பக்கத்தையும், சம்மந்தப்பட்டவரின் தொலைப்பேசி எண்ணையும் பிளாக் செய்து விடுகின்றனர். 

அப்படி, பிளாக் செய்த ஒரு பெண்ணுக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்பு 2 ஆண்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, மிரட்டி உள்ளனர். அந்த இரண்டு பேரும் போன் செய்து, “நாங்கள் சொல்வது போல் செய்யவில்லை என்றால், நீ ஏற்கனவே அனுப்பி வைத்த கிளமரான உனது புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன்” என்று, மிரட்டி உள்ளனர். இதனால், பயந்து போன அந்த இளம் பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “ராஷி கோயல் என்ற பெண்ணின் பெயரில் போலி கணக்கு வைத்திருந்தது ஒரு ஆண்” என்பதை, போலீசார் கண்டுபிடித்தனர். 

அந்த ஆணின் பெயர் மம் சந்த் என்பதும், அந்த நபர் இதேப் போன்று பெண்களின் பெயரில் 4 போலியான கணக்குகளை வைத்துக் கொண்டு, பல பெண்களை இது போன்று நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றி புகைப்படங்களைப் பெற்றுக்கொண்டு, பின்னர் மிரட்டலில் ஈடுபட்டு வந்ததும்” தெரிய வந்தது.

இதனையடுத்து, மம் சந்தை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தான், இவ்வளவு உண்மைகளும் தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக, மம் சந்தின் செல்போனில், பல பெண்களின் புகைப்படங்கள் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 4 சிம் கார்டுகள், 3 சொல்போன்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, மம் சந்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.