திருவிழாவுக்கு சென்று விட்டு தாயுடன் நடந்து சென்ற 19 வயது இளம் பெண்ணை கடத்திய கும்பல், அவரை சாதியை சொல்லித் திட்டிக்கொண்டே கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வழக்கம் போல் நடைபெறும் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் தான் இந்த கொடூர சம்பவமும் நடந்திருக்கிறது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் புலந்த்சாகர் அருகே உள்ள பிபி நகர் என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது தலித் இளம் பெண் ஒருவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணமாகி உள்ளது.

தற்போது, தனது அம்மா வீட்டிற்கு வந்த அந்த பெண், கடந்த 15 ஆம் தேதி அருகில் நடக்கும் கோயில் திருவிழாவிற்குச் சென்று விட்டு அந்த பெண் நள்ளிரவு நேரத்தில் தனது தாயாருடன் அந்த பெண் வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.

அப்போது, அதிகாலை மிகச் சரியாக 2 மணி இருக்கும் நேரத்தில் அந்த இளம் பெண், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக அந்த 19 வயது பெண் மட்டும் தனியாகத் தனது அம்மாவை நிற்க வைத்துவிட்டு, சற்று அருகில் ஒதுங்கியிருக்கிறார்.

அந்த நேரத்தில், திடீரென மகளின் அலறல் சத்தம் கேட்டிருக்கிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் தாய், சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி பார்த்தபோது, தனது மகள் அங்கு இல்லை. அத்துடன், அந்த பகுதி முழுவதும் தேடிப் பார்த்தும், தனது மகளை அந்த தாயால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால், சிறிது தாமதிக்காமல் அருகில் உள்ள தனது வீட்டிற்கு ஓடிச் சென்று வீட்டில் உள்ளவர்களை எழுப்பி நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இதனையடுத்து, வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் குறிப்பிட்ட அந்த பகுதியில் வந்து, அந்த இளம் பெண்ணை தேடி உள்ளனர்.

அந்த பகுதியில் தேடிப் பார்த்த போது, அங்குள்ள ஒரு புதரில் மயக்கமடைந்த நிலையில் அந்த 19 வயது பெண் இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மயக்கம் தெளிந்த அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில், “என்னை 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி அங்கிருந்த கரும்பு தோட்டத்துக்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம்” செய்தனர் என்று கூறியுள்ளார்.

குறிப்பாக, “என்னை அந்த கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்யும் போது, அவர்கள் என்னை சாதி ரீதியில் திட்டிக்கொண்டே பலாத்காரம் செய்தனர்” என்றும், கூறியுள்ளார். 

அத்துடன், “தன்னை பலாத்காரம் செய்தவர்களில் 2 பேர் எனக்கு ஏற்கனவே தெரிந்தவர்கள்” என்று, அந்த பெண் அடையாளம் கூறிய நிலையில், சம்மந்தப்பட்ட இருவரும் தற்போது அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.