மும்பையில் தில்லாலங்கடி பெண் ஒருவர் தனது ஆண் நண்பரை வீடியோ காலில் நிர்வாணமாக பேச வைத்து, அதை ரெக்கார்ட் செய்து வைத்து, நூதன முறையில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மும்பையைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய பணி சமூக வலைத்தளம் சர்ந்ததாக உள்ளதால், அவர் எப்போதும், சமூக வலைத்தளத்தில் மூழ்கி இருந்துள்ளார்.

அப்போது, சமூக வலைத்தளம் மூலமாக அவரும் ப்ரக்யா என்ற ஒரு இளம் பெண், அறிமுகம் ஆகி நட்பாக சாட்டிங் செய்து வந்துள்ளார். இப்படியாக சாட்டிங்கில் அவர்கள் தொடர்ந்து பேசி வந்த நிலையில், தங்களது செல்போன் எண்ணையும் அவர்கள் பகிர்ந்துகொண்டதாகத் தெரிகிறது.

இதனையடுத்து, சம்பவத்தன்று ப்ரக்யா என்ற பெண், அந்த இளைஞருக்கு சாட்டிங் செய்து, “உங்களிடம் வீடியோ காலில் பேச விரும்புவதாக” கூறி உள்ளார்.

அதற்கு, அந்த இளைஞரும் ஒப்புக்கொண்டுள்ளார். அதன்படி, அந்த பெண் வீடியோ காலில் அந்த இளைஞரை தொடர்பு கொண்டுள்ளார். வீடியோ காலிலை எடுத்துப் பேசிய அந்த இளைஞர் கடும் அதிர்ச்சியடைந்தார். 

அதற்கு காரணம், அந்த வீடியோ காலில் அந்த இளம் பெண், ஆடைகள் இன்றி நிர்வாணமாக தோன்றி, அந்த இளைஞரிடம் பேசி உள்ளார். மிகச் சரியாக அந்த வீடியோ கால் 3 வினாடிகள் மட்டுமே இருந்துள்ளது. அதன் பிறகு, அந்த வீடியோ காலை அவர் தண்டித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த இளைஞருக்கு சாட்டிங் செய்த அந்த இளம் பெண், “நீயும் இது போன்று ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக என்னிடம் பேச வேண்டும்” என்று, அன்பாக பேசி ஐஸ் வைத்துள்ளார்.

இதனால், சபலப்பட்ட அந்த இளைஞர், அந்த இளம் பெண் கேட்டுக்கொண்டதின் படியே, ஆடைகள் இல்லாமல் நிர்வாணமாக அந்த பெண்ணிடம் ஆபாசமாக வழிஞ்சி பேசியதாக” தெரிகிறது.

இதனை, அந்த கில்லாடி பெண், அந்த இளைஞனுக்குத் தெரியாமலேயே ரெக்கார்ட் செய்து வைத்துள்ளார்.

அந்த இளைஞர், வீடியோ கால் பேசி வைத்த உடனே, அந்த இளைஞருக்கு சாட்டிங் செய்த அந்த கில்லாடி பெண், “நீ ஆடைகள் இல்லாமல் பேசியதை நான் வீடியோ ரெக்கார்ட் செய்து வைத்துள்ளேன் என்றும், உடனே எனக்கு 20,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், இல்லா விட்டால் இந்த வீடியோ உன்னுடைய எல்லா நண்பர்களுக்கும் அனுப்பி விடுவேன்” என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால், பதறிப்போன அந்த இளைஞர், அந்த பெண் கேட்டது போலவே, 2,000 ரூபாய் அனுப்பி வைத்துள்ளார். பணம் பெற்றுக்கொண்ட பின்னரும், அந்த இளைஞரின் தோழி ஒருவருக்கு அந்த நிர்வாண வீடியோவை அனுப்பி வைத்துள்ளார். இதனைப் பார்த்த அந்த பெண் தோழி, கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து, அந்த இளம் பெண் ப்ரக்யா, மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். அதன்படியே அந்த பெண் பணம் கேட்கும் போதெல்லாம் அவர் பணம் கொடுத்து வந்துள்ளார்.

ஆனால், பணம் கேட்டு மிரட்டும் படலம் நிற்காமல் தொடர்ந்து, அந்த பெண் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இதனால், பயந்துபோன அந்த இளைஞர், இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக, அந்த இளைஞர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த வங்கிக் கணக்கு லாலு பிரசாத் ப்ரக்யா ஜெயின் என்ற ஒரு ஆணின் பெயரில் இருப்பது தெரிய வந்தது.

மேலும், போலியாக ஒரு பெண்ணின் பெயரைப் பயன்படுத்தி, இணையத்தில் மோசடி செய்ததும் இதன் மூலம் தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.