இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,00,000ஐ கடந்துள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 67,151 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நாளில் 1059 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,34,475 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 24,67, 759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7,07,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 59,449 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுவரை 3, 76,51,512 மாதிரிகளும், 8,23,992 மாதிரிகள் புதிதாக நேற்று ஒரே நாளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இப்படியான சூழலில் முக கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் அரசு சொல்லும் எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் இருக்கும் பொறுப்பற்ற மக்களால்தான் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக இந்திய மருத்துவ கவுன்சில் வருத்தம் தெரிவித்துள்ளது

தமிழகம் உள்பட இந்தியாவில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 60 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா புதிதாக பரவி உள்ளது என்பதும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதற்கு பொதுமக்கள் முக கவசம் அணியாமல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதே காரணம் என்று இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

இது குறித்து விஞ்ஞானி ஒருவர் கூறியபோது, ``குறிப்பாக இளைஞர்கள் மிகவும் கவனக்குறைவாக இருப்பதாகவும் பொறுப்பற்ற மக்களால் தான் கொரோனா வேகமாக பரவுகிறது" என்றும் அவர் தெரிவித்தார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக சில வாரங்களுக்கு முன் உலக சுகாதார நிறுவன அதிகாரியொருவர், ``உலகம் முழுவதும், இளைஞர்கள் அதிகமாக வெளியில் செல்கிறார்கள். குறிப்பாக, கடற்கரைகள் - இரவு நேர பார்ட்டிகளில் பங்கேற்கும் நபர்கள் அதிகம் இருக்கிறார்கள். இவர்கள், கொரோனாவை நிச்சயமாக பெற்றுவிடுகின்றனர். கடந்த ஐந்து மாதத்தில் மட்டும், 15 - 24 வயதை ஒட்டிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பிப்ரவரி 24 ம் தேதி, 4.5 % என்றிருந்த நோயாளிகள் சதவிகிதம், ஜூலை 12ம் தேதி,15% என்றாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக ஐரோப்பிய நாடுகளும் ஆசிய நாடுகளும் தான் இருக்கின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார். ஐரோப்பாவில் ஸ்பெயின், ஜெர்மனி, ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளும்; ஆசியாவில் ஜப்பானும் அதிகளவு இளைய சமுதாய நோயாளிகளை பெறுவதாக அவர்கள் கூறியிருந்தனர். இவர்கள் சொன்ன கருத்துக்கும், இப்போது ஐ சி எம் ஆர் கூறியிருக்கும் கருத்துக்கும் ஒற்றுமை இருப்பதாக பார்க்கப்படுகிறது.

``இளைஞர்கள், மாஸ்க் அணிவது - சமூக இடைவெளி விட்டு செயல்படுவது, போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுவதில்லை" என்று, ஆய்வாளரொருவர், கருத்து தெரிவித்துள்ளார். இளைய சமுதாயம், இந்தளவுக்கு விழிப்புஉணர்வின்மையோடு இருப்பது ஆபத்தாக மாறும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.