உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் இந்திய வைரலாஜி துறையின் ஒத்துழைப்புடன் , ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கோவாக்சின் என்கிற பெயரில் தயாரித்து வருகிறது. இரண்டுக்கட்ட சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள இந்த மருந்தின் மூன்றாம் கட்ட சோதனை கடந்த மாதம் துவங்கியது. 
இன்னும் ஒரு வார காலங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருத்து செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் ,ஹரியானா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தடுப்பு மருந்தை தன்னார்வலராக செலுத்திக்கொண்டார். 
சிலநாட்களுக்கு பிறகு அவருக்கு கொரோனா தோற்று இருப்பதாக சந்தேகப்பட்டு , கொரோனா பரிசோதனை செய்தப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. அதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக  அவரது ட்விட்டர் பதிவில், தனக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே தன்னுடன் தொடர்பிலிருந்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என பதிவிட்டுள்ளார். 
இது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுயிருக்கிறது. இறுதிகட்ட பரிசோதனையில் இருந்த தடுப்பூசி வெற்றிப்பெற்றுவிடும் என கணித்திருந்த நிலையில் , ஹரியானா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுக்கு மேலும் ஒரு பின்னடைவை கொடுத்திருக்கிறது.