கல்லூரி மாணவியை காதலன் உள்பட 2 பேர் சேர்ந்து, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா கெரேகோடு கிராமத்தைச் சேர்ந்த 24 வயதான யோகேஷ் என்ற இளைஞர், அதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது கல்லூரி மாணவியை காதலித்து வந்தார். 

அந்த கல்லூரி மாணவியும், இளைஞர் யோகேசை காதலித்து வந்தார். இதனையடுத்து, அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர். அத்துடன், அவர்கள் இருவரும் அந்த பகுதியில் பல்வேறு இடங்களுக்கு ஊர் சுற்றித்திரிந்து வந்துள்ளனர்.  

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அந்த கல்லூரி மாணவியிடம், திருமண ஆசை வார்த்தை கூறி காதலன் யோகேஷ் பல முறை அந்த மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இது தொடர் கதையாக நடக்கவே, பயந்துபோன அந்த மாணவி, “என்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி” யோகேசிடம் கேட்டு வற்புறுத்தத் தொடங்கி உள்ளார்.

இதற்கு, அந்த மாணவியை திருமணம் செய்ய யோகேஷ் முற்றிலுமாக மறுத்து விட்டார். இதையடுத்து, அவர்கள் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் தான், கடந்த 26 ஆம் துதி இரவு காதலன் யோகேஷ், தனது காதலியான அந்த கல்லூரி மாணவியிடம் செல்போன் மூலம் பேசி உள்ளார். 

அப்போது, “நாம் இருவரும், யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி பெங்களூருவுக்கு சென்று திருமணம் செய்து கொள்ளலாம்” என்று கூறி, அந்த மாணவியை வீட்டை விட்டு வெளியே வரவழைத்து உள்ளார். அதை நம்பிய அந்த கல்லூரி மாணவி, வீட்டை விட்டு வெளியேறி யோகேசை அந்த இரவு நேரத்தில் வந்து தனியாக சந்தித்து உள்ளார். 

அப்போது, காதலன் யோகேசும், அவரது நண்பர் ஒருவரும் சேர்ந்து அந்த கல்லூரி மாணவியை அங்கவள்ளி கிராமம் அருகே இருக்கும் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து, அந்த மாணவியிடம் யோகேஷ் உல்லாசம் அனுபவித்து உள்ளார்.

அதன் பிறகு, அந்த காதலன், தன்னுடைய காதலியை தன்னுடைய நண்பனுக்கு விருந்தாக்கி உள்ளான். அதற்கு அந்த பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். 

இதனால், கடும் கோபம் அடைந்த காதலன் யோகேசும், அவனது கூட்டாளியும் சேர்ந்து அந்த மாணவியை சரமாரியாக தாக்கி, இருவரும் சேர்ந்து அந்த மாணவியை மாறி மாறி கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  

இதனால், அந்த மாணவி அங்கேயே கதறி அழுதுள்ளார். அப்போது, இப்படியே விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்த காதலன் யோகேசும், அவரது கூட்டாளியும் சேர்ந்து அந்த மாணவியை அடித்து, உதைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.  

அதன் பின்னர், அந்த மாணவியின் உடலை ஏரியில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று உள்ளனர். இந்த நிலையில், இன்று காலையில் அந்த மாணவியை அவருடைய பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது, அங்கவள்ளி கிராமத்தில் உள்ள ஏரியில் மாணவி பிணமாக மிதப்பது தெரிந்து கடும் அதிர்ச்சியடைந்தனர். 

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த ஒலேநரசிப்புரா புறநகர் போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் 
பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், “அந்த மாணவியை அவருடைய காதலன் யோகேசும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு, உடலை ஏரியில் வீசி விட்டுத் தப்பிச்சென்றது தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த போலீசார். இது குறித்து வழக்குப் பதிவு செய்து யோகேஷ் மற்றும் அவனது கூட்டாளி மீது போக்சோ மற்றும் கொலை செய்தல் உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அத்துடன், தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.