“பயணிகள் யாரும் இல்லை” என்று கூறி, ஒரு ட்ரிப்பை கேன்சல் செய்த கண்டக்டர், பேருந்தில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாலா பகுதியைச் சேர்ந்த 31 வயதான முகம்மது அப்சல், தனியார் பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்தார். 

பஸ் கண்டக்டரான  31 வயதான முகம்மது அப்சலுக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்த சூழலில் தான், அங்குள்ள இடுக்கி மாவட்டம் கட்டப்பனை சேர்ந்த 35 வயதான எபின் என்பவர், அதே தனியார் பேருந்தில் டிரைவாக வேலை பார்த்து வந்தார்.

இப்படியாக, இவர்கள் இருவரும் பணியாற்றி வந்த தனியார் பேருந்தில் அங்குள்ள பாலா பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு மாணவி, தினமும் பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார்.

அப்போது, அந்த 8 ஆம் வகுப்பு மாணவிக்கும், அப்சலுக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டு, அவர்கள் இருவரும் சகஜமாக பேசி வந்திருக்கிறார்கள்.

இப்படியாக, அந்த 8 ஆம் வகுப்பு மாணவியுடன் பேசி வந்த பேருந்தின் கண்டக்டர்  31 வயதான முகம்மது அப்சல், தனக்கு திருமணம் ஆனதை மறைத்து “எனக்கும் இன்னும் திருமணமாகவில்லை” என்று, கூறி அந்த மாணவியை காதலிப்பது போல் நடித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த மாணவியை பாலா பேருந்து நிலையத்திற்கு அவர் அழைத்து உள்ளார். 

அதன்படியே, அந்த மாணவியும் மதியம் பள்ளிக்கு விடுமுறை சொல்லிவிட்டு, காதலன் அழைப்பின் பேரில் அங்கு வந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் தான், பேருந்தின் கண்டக்டரான அப்சல், “பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை” என்று கூறி விட்டு, அந்த ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு, தொடர்ந்து அந்த பேருந்தை இயக்கி உள்ளார். 

அதன்படி, அந்த பேருந்தை அந்த பகுதியில் உள்ள ஒரு ஒதுக்கு புறமாக நிறுத்தி உள்ளார்.

அந்த நேரம் பார்த்து, காதலியான அந்த 8 ஆம் வகுப்பு மாணவி அந்த பேருந்தில் ஏறி வந்திருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாக, அந்த பேருந்தின் படிக்கட்டு வாசல், ஜன்னல்களை அப்சல் முடி உள்ளார். 

இதனையடுத்து தான், அந்த 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை அந்த பேருந்திற்குள் வைத்து அப்சல் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

அந்த நேரத்தில், அந்த மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தகவல், அந்த பகுதியின் பாலா டிஎஸ்பி ஷாஜு ஜோசுக்கு தெரிய வந்திருக்கிறது.

இது தொடர்பாக சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த அவர், அந்த பேருந்தின் கதவை திறந்து உள்ளே அதிரடியாக நுழைந்து அந்த மாணவியை மீட்டு உள்ளார்.

அத்துடன், பள்ளி மாணவியை பலவந்தமாக பலாத்காரம் செய்த அப்சலையும் போலீசார் அதிரடியாகவே அப்போதே கைது செய்தார். 

மேலும், அப்சலுக்கு உடந்தையாக இருந்த அந்த பேருந்தின் டிரைவர் எபினையும் போலீசார் அதிரடியாக கைது செய்து அழைத்துச் சென்றனர.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியை அங்குள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், கோட்டயம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.