பிரபல மலையாள நடிகையான ரேவதி சம்பத், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் என 14 பேர் அடங்கிய ஒரு நீண்ட பட்டியலை தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளது மலையாள சினிமா உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுக்கள் கூறுவது, தற்போது தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. அதுவும் Metoo வந்த பிறகு, பல நடிகைகள் மிகவும் துனிச்சலாக பாலியல் சீண்டலுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர்.

அந்த வகையில், இந்திய சினிமா வரலாற்றில் தற்போது Metoo 2 வது அலை வீச தொடங்கியிருக்கிறது என்றே கூறலாம்.

அந்த வகையில், பிரபல மலையாள நடிகை ரேவதி சம்பத், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் அடங்கிய ஒரு நீண்ட பட்டியலை தன்னுடைய ஃபேஸ்புக்கில் வெளியிட்டு உள்ளார்.

அதாவது, கேரளாவில் நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம் கொண்டவராகத் திகழ்கிறார் 27 வயதான ரேவதி சம்பத். 

அத்துடன், கோவையில் உள்ள கேஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்று இருக்கிறார். 

மேலும், ரேவதி சம்பதின் மிகப் பெரிய படைப்புகளில் ஒன்றான “வாஃப்ட்” என்ற குறும்படம் இன்றளவும் பேசப்படும் படைப்பாக இருக்கிறது.

ரேவதி சம்பதின் இந்த குறும்படமானது, அவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முக்கிய பங்காற்றி இருக்கிறது. ரேவதி சம்பத், சினிமாவில் நுழைவதற்கு முன்பு ஒரு வருடத்திற்கு முன்பாக இந்த படம் வெளியிடப்பட்டது. 

அதன் படி, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான “பட்னாகர்” என்கிற திரைப்படத்தின் மூலமாக, ரேவதி சம்பதின் மலையாள சினிமாவில் அடியெடுத்து வைத்தார், அறிமுகமானார்.

இப்படி பன்முகம்கொண்டவராகத் திகழும் நடிகை ரேவதி சம்பத், தற்போது தனக்கு பாலியல் தொல்லை தந்தவர்கள் என்று, 14 பேருடைய பட்டியலை ஒன்றை தற்போது தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் துணிச்சலாக வெளியிட்டு இருக்கிறார். 

அந்த ஃபேஸ்புக் பதிவில், “இவர்கள் என்னை பாலியல் ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்வு ரீதியாக, துன்புறுத்தியவர்கள் என்றும், அந்த குற்றவாளிகளின் பெயர் பட்டியல் இது தான்” என்றும், நடிகை ரேவதி சம்பத் வெளிப்படையாகவே ஓபன் டாக்காக வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார். 

அந்த பட்டியலில் ஒன்று, இரண்டு, மூன்று என்று நம்பர் போட்டு மொத்தம் 14 பெயர்களை வரிசைப்படுத்தி, எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் என்று கூறியிருக்கிறார்.

அதன் படி,

1. ராஜேஷ் தொச்சிவர் (இயக்குனர்)
2. சித்திக் (நடிகர்)
3. ஆஷிக் மஹி (ஒளிப்பதிவாளர்)
4. சிஜூ (நடிகர்)
5. அம்ஹில் தேவ் (கேரள பேஷன் லீக் நிறுவனர்)
6. அஜய் பிரபாகர் (டாக்டர்)
7. எம்.எஸ்.பதுஷ்
8. சவுரப் கிருஷ்ணன்
9. நந்து அசோகன்
10. மேக்ஸ்வெல் ஜோஸ் (குறும்பட இயக்குனர்)
11. ஷனூப் கர்வத் (விளம்பரப்பட இயக்குனர்)
12. ரஹீந்த் பாய் (காஸ்டிங் இயக்குனர்)
13. சருன் லியோ (வங்கி ஏஜென்ட்)
14. பினு (போலீஸ் இன்ஸ்பெக்டர்) என்று, நடிகை ரேவதி சம்பத் பகிரங்கமாக வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார்.

தற்போது, ரேவதி சம்பத் குற்றம்சாட்டியிருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு தரப்பும், இது வெறும் பப்ளிசிட்டி ஸ்டன்ட் என மற்றொரு தரப்பும் எதிர்மறையான விமர்சனங்களை முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.