ஒரு ஆண் டாக்டரிடம் செக்கப்பிற்கு சென்ற பெண் ஒருவர், அந்த டாக்டரை பிக்கப் செய்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சார்கோப்பில் உள்ள செக்டார் 3 ஆம் பகுதியில் 53 வயதான டாக்டர் சுதிர் ஷெட்டி என்பவர், கிளினிக் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த மருத்துவர் ரொம்பவும் அமைதியாகவும், எளிமையாகவும் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இப்படியான சூழலில் தான், இந்த 53 வயதான டாக்டர் சுதிர் ஷெட்டியை, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு கூட்டம், ஒரு இளம் பெண்ணை வைத்து பாலியல் மோசடியில் சிக்க வைத்து, அந்த டாக்டரிடம் பணம் பறிக்க நூதனமான முறையில் திட்டமிட்டது.

திட்டமிட்டபடி, அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு 25 வயதான இளம் பெண்ணை, அந்த கும்பல் குறிப்பிட்ட அந்த டாக்டரிடம் சிகிச்சைக்கு செல்வது போல் அனுப்பி இருக்கிறார்கள்.

அப்போது, அந்த டாக்டர் அந்த பெண்ணை தனது சிகிச்சை அறையில் படுக்க வைத்து செக்கப் பண்ணியிருக்கிறார்.

அந்த நேரத்தில், இதனை குறிப்பிட்ட அந்த கும்பல் ரகசியமாக வீடியோ எடுத்து இருக்கிறது.  இதற்கு, அந்த பெண்ணும் உடந்தையாகவே இருந்திருக்கிறார்.

அதன்படியே, அந்த இளம் பெண்ணும், அந்த டாக்டரிடம் தனது உடம்பில் பல இடங்களில் செக்கப் பண்ண சொல்லி நடித்திருக்கிறார்.

இதனை மறைவாக இருந்து வீடியோவாக பதிவு செய்துகொண்ட அந்த மர்ம கும்பல், அதன் பிறகு அந்த வீடியோவை காட்டி அந்த டாக்டரிடம் இதனை காட்டி, இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி அவரிடம் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்து பயந்து போன அந்த டாக்டர், அந்த பெண்ணிடம் 2 லட்சம் ரூபாய் வரை கொடுத்திருக்கிறார். 

ஆனால், அந்த கும்பல் பயந்து போன அந்த டாக்டரிடம் இன்னும் அதிகமாக பணம் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள்.

இதனால், இன்னும் பயந்து போன அந்த டாக்டர், அந்த மிரட்டல் கும்பல் குறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், மிரட்டிய கூட்டத்தைச் சேர்ந்த அமித் மானே, தீபக் மானே மற்றும் மனோஜ் நாயுடு மற்றும் அந்த 2 இளம் பெண்களை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, ஒரு ஆண் டாக்டரிடம் செக்கப்பிற்கு சென்ற இளம் பெண் ஒருவர், அந்த டாக்டரை பிக்கப் செய்து மிரட்டி பணம் பறித்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.