ஒரு டிரைவரின் மனைவியை மற்றொரு டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த கொடுமை, கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் தான் இப்படி ஒரு பாலியல் பலாத்காரம் சம்பவம் அரங்கேறிப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

டெல்லி அருகே இருக்கும் ஹரியானாவின் குருகிராமில் செக்டர் 63 A என்னும் பகுதியில், வாடகை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

அந்த வாடகை விடுதியில், ஒரு கார் டிரைவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கியிருந்தார்.

அத்துடன், கடந்த 6 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று அதிகாலை நேரத்தில், அந்த கார் டிரைவர் தன்னுடைய மனைவியை அங்கு தூங்க சொல்லிவிட்டு, தன்னுடைய காருக்கு பெட்ரோல் போட சென்றுருக்கிறார்.

அப்போது, அந்த விடுதிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் 25 வயதான மற்றொரு கார் டிரைவர் வசித்து வந்தார். 

அந்த நேரத்தில், கார் டிரைவரின் மனைவி தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்டார் அந்த பக்கத்து வீட்டு கார் டிரைவர், அந்த அதிகாலை 5 மணி அளவில் அந்த வீட்டிற்குள் நுழைந்து உள்ளார்.

அப்போது, அங்கு தூங்கிக்கொண்டிருந்த அந்த பெண்ணின் வாயை மூடி, வீட்டில் உள்ள பெட்டில் தள்ளி அந்த பெண்ணை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.

இதனையடுத்து, அந்த பெண்ணை அப்படியே விட்டு விட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடி உள்ளார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தன்னுடைய கணவருக்கு போன் செய்து, தனக்கு மற்றொரு கார் டிரைவரால் நடந்து பலாத்காரம் கொடுமை குறித்து கூறி, கதறி அழுதுள்ளார். 

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் கணவன், உடனடியாக வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் “என்ன நடந்தது?” என்று விளக்கமாகக் கேட்டிருக்கிறார். 

இதனையடுத்து, தனது மனைவியை வைத்து அங்குள்ள காவல் நிலைய உதவி எண் “112” என்ற ஹெல்ப்லைனைக்கு, டயல் செய்து புகார் கூறி உள்ளார். 

இது குறித்தது விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணிடம் நேரில் வந்து புகாரைப் பெற்றுக்கொண்டு, அந்த பெண்ணிடம் முழுவதுமாக விசாரித்து உள்ளனர்.

பின்னர், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பாலியல் பலாத்காரம் செய்த கார் டிரைவரை அதிரடியாகக் கைது செய்து, அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.