பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து சமூக வளைதளங்கள் மற்றும் எதிர்கட்சிகளால் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகும் ஒரு விஷயம். இந்நிலையில் "Modi India Calling - 2021" என்ற தலைப்பிலான இப்புத்தகத்திற்கான வெளியிட்டு இருக்கிறார் பாஜக பிரமுகர் விஜய் ஜாலி. இது பிரதமர் மோடியின் 107 வெளிநாட்டு பயணங்களின் தொகுப்பு இந்த புத்தகம். 


“இப்புத்தகத்தில் இருக்கும் 450 பக்கங்களில் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் ஒரு லட்சத்திற்கும் மேலான புகைப்பட தொகுப்பில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் எந்த வகையில் நாட்டுக்கு நன்மையை கொடுத்து இருக்கிறது மற்றும் உலகதலைவர்களிடத்தில் மோடியின் செல்வாக்கு எவ்வளவு இருந்தது என்பதை நேரடியாக மக்களிடம் எடுத்துக்கூற திட்டமிட்டிருந்தேன். அதற்காக  புகைப்பட கண்காட்சி ஒன்றை நடத்தவே முதலில் விரும்பினேன் இருப்பினும் கொரோனா பரவலால் இதனை புத்தகமாக கொண்டு வந்த இருக்கிறேன்” என்று விஜய் ஜாலி தெரிவித்து இருக்கிறார்.